பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காப்புப் பருவம் இவர் சைவ சமயம் தணந்து சமண சமயம் புகுந்தார். இவரை மீண்டும் சைவ சமயம் புகுமாறு செய்யத் திலகவதி யார் இறைவரை வேண்ட, இறைவர் அவருக்குச் சூலநோய் தர அதனைச் சமணர் போக்க முயன்றும் போகா நிலையில் தம் தமக்கையாரை அடைந்து திருநீறும் ஐந்தெழுத்து உபதேசமும் பெற்று, நோப் நீங்கிச் சைவர் ஆயினர். இதல்ை சமணர்கள் இவரைக் கொல்ல யானையை ஏவினர். சுண்ணும்பு காளவ்ாயில் அடைத்து வைத்தனர். நஞ்சு உணவு கொடுத்தனர். கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தனர். இவற்றினின்று இறைவர் திருவருள் கொண்டு உய்ந்தார். பிறகு இறைவரிடம் தாம் சமண சமயம் புகுந்ததனால் உண் டான மாசு நீங்கச் சூலப் பொறி, இடபப் பொறி பொறித் தருள வேண்டினர். இறைவரும், அவ்வாறே செய்தனர். இடையிடையே பல தலங்கட்குச் சென்று, பதிகங்கள் பாடினர். திருஞான சம்பந்தரைக் கண்டு இன் புற்ருர். திருநல்லூரில் இறைவர் தம் திருவடி சூட்டும் பேறு பெற்ருர் அப்பூதியார் அருமை மகளுர் பாம்பு கடித்து இறந்ததை அறிந்து பதிகம் பாடி அவனே எழுப்பினர். திரு விழிமிழலையில் இறைவர் தினமும் தந்த படிக்காசு பெற்று மகேஸ்வரபூசை நடத்திவந்தனர். திருமறைக்காட்டில் வேதங்களால் பூசித்துச் சாத்தப்பட்ட கதவைப் பதிகம் பாடித் திறந்தார். திருப்பழையாறு வடதளியில் சமணர் களால் மறைப்புண்ட சிவலிங்கத்தைப் பாடு கிடந்து வெளிப் படுத்தினர். திருப் பைஞ்ஞீலிக்குப் போகும் வழியில், இவரது களைப்பை நீக்க இறைவர் பொதி சோறு ஈந்தார். கயிலே காணவேண்டும் என்ற அவாவினல் உடல் தேய வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்ரும். இறை வர் இடையே தோன்றி அவரது உடல் குறை நீக்கித் திருவையாற்றில் கயிலைக் காட்சி காண ஆணையிட, அவ்வாறே அங்குக் கண்டு இன்புற்ருர். திருப்புகலூரில் திருத்தொண்டு புரிந்து, இறைவன் திருவடியுற்று இன்புற்ருர். இவர் இறைவனேடு இரண்டறக் கலந்த நாள் சித்திரை மாதம் சதய நட்சத்திரம் ஆகும்.