பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பப் பருவம் 75 L என அறிவித்துப் போந்தார். இவ்வாறு பற்பல இடங்களிலே தேவாரத் திருமறைக்கு விளக்கம் தந்த காரணம் கருதியே ஈண்டுப் பிள்ளை அவர்கள் 'மூவர் மறைப் பொருள்தெரியமுன் ஒருவர் அருள்மறைப் பொருள் விளக்கும் நம்பு அரு வித்தியா ரணிய முனிவரன் உளம் நயப்ப' என்றனர். ஒருவன் என்பது சிவபெருமானர். அவரே வேதங்களை அருளிச் செய்தவர். இதனே 'வேதம் ஓதி வெண்ணுரல் பூண்டு” என்று சம்பந்தரும் 'பாடினர் சாமவேதம் பைம்பொழில் பழனம்மேயார், சாந் தோக சாமவேதம் ஒதும் வாயான' என்று அப்பரும் அறிவித்திருப்பதைக் காண்க. நம்பு என்பது விருப்பம் என்னும் பொருளது. இதனைத் தொல்காப்பியத்துள் 'நம்பும் மேவும் நசையா கும்மே” என்னும் நூற்பாவால் அறிக. வித்தியாரண்ய முனிவர் வேதத்திற்கு விரிவுரை எழுதியவர். சேக்கிழார் பெருமனர். பேச்சாற்றலில் ப்ெரிதும் சிறந்தவர். கேட்டார்ப் பிணிக்கும் தகையைவாய்க் கேளராரும் வேட்ப மொழிவதாம் சொல் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து, என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கியமாய்த் திகழ்ந் தவர். இன்றேல், அநபாயச் சோழன் சீவக சிந்தாமணியில் ஈடுபட்டிருந்த நிலையினே மாற்றிச் சிவனடியார்களின் வர லாற்றில் ஈடுபடும் படி செய்திருக்க முடியுமோ? இதற்குக் காரணம் நாவன்மையே ஆகும். இதனை உமாபதி சிவம், வளவனும்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக்கதையை மெய்என்று வரிசை கூற உளம்மகிழ்ந்து பலபடப்பா ராட்டிக் கேட்க உபயகுல மணிவிளக்காம் சேக்கி ழார்கண் டிளஅரசன் தனநோக்கிச் சமணர் பொய்நூல் இதுமறுமைக் காகாதிம் மைக்கும் அற்றே வளமருவு கின்றசிவ கதைஇம் மைக்கும் மறுமைக்கும் உறுதி.என வளவன் கேட்டு எனக்கூறியது காண்க.