பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காப்புப் பருவம் சோழன் சேக்கிழாரை அக்கதையைச் சாற்றும் என்று கேட்கும் நிலையுற்ருன் என்ருல், அதுவே அவரது நாவன்மை யினைக் காட்டுதற்குப் போதிய சான்று அன்ருே? சேக்கிழார் பாடிய பெரியபுராணம் முற்றிலும் அவரது நாவன்மையினைக் காட்டும். ஆகவே, 'நாவலர் பிரான்' எனப்பட்டார். வம்பரு யாப்பு என்பது, வம்பரு வரிவண்டு மனம்நாற மலரும் மதுமலர்க் கொன்றையான் அடியலால் பேணு எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமா சி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்பது, பிரமசரிய நிலை என்பது வேதம் ஒதுதல், விரதம் காத் தல் முதலான நியமங்களோடு ஒழுகும் பருவம். இந்த நிலை, பின்வரும் கிருகஸ்தம், வானப் பிரஸ்த்தம், சந்நியாசம் ஆகிய நிலைகட்கு அடிப்படை ஆதலின், 'வண்பிரமச்சரியம்' எனப் பட்டது. மடப்பாவை என்பவள் பூம்பாவை . திருமயிலையில் சிவநேசர் என்னும் வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற மகளே பூம்பாவை என்பவள். அம்மகளைத் திருஞான சம்பந்தருக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானித்தார். பெண் வ்ளர்ந்து வந்தது. இறைவனுக்கு மலர் கொப்து மாலை கட்டிச் சாத்தும் தொண்டில் ஈடுபட்டாள். ஒருநாள் பூநாகம் தீண்டிவிட இறத்தாள். சிவநேசர் வருந்தினர். அம்மகளின் இறந்த உடலைக் கொளுத்தி அச்சாம்பரைக் குடத்தில் வைத்திருந்து சம்பந்தர் வந்தப்ோது அதனை முன் வைத்து நடந்தவற்றை நவின்ருர். சம்பந்தர் அருள் கூர்ந்து இறைவனே நினேந்து,