பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் '79 பணிவளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் நணியபேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடு வார்க்கு மணிநிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும் அணிநிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட இளமையில் அனைய சாயல் ஏந்திழை குழைகொள் காது வளமிகு வனப்பி லுைம் வடிந்ததாள் உடைமை யானும் கிளர்ஒளி மகர ஏறு கெழுமிய தன்மை யாலும் அளவில்சீர் அனங்கன் வென்றிக் கொடிஇரண் டனைய ஆக விற்பொவி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது பொற்பமை வதனம் ஆகும் பதுமநல் நீதியம் பூத்த நற்பெரும் பணிலம் என்னும் நன்நிதி போன்று தோன்றி அற்பொலி கண்டர் தந்த அருட்கடை யாளம் காட்ட எரிஅவிழ் காந்தாள் மென்பூத் தலைதொடுத் திசைய வைத்துத் திரள் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு கருநெடும் கயல்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் அருகிழிந் தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற