பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 81 பூவலர் நறுமென் கூந்தல் பொற்கொடி கணக்கால் காமன் ஆவநா ழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த மேவிய செம்பொன் தட்டின் வனப்பினே மீதிட் டென்றும் ஒவியர்க் கெழுத ஒண்ணுப் பரட்டொளி ஒளிவுற் ருேங்க கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக் கணியாய் நின்ருள் என்று பாடிக் காட்டினர். இதனால்தான் இவ்வம்மையார் ஒரு (ஒப்பற்ற) மடப பாவை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனர். திருஞான சம்பந்தர் அன்பர்க்கு எளியராகவும் வன்பர்க்கு வலியராகவும் விளங்கியவர். பரசமயகரிகட்கு இவர் அரியாக இருந்தவர். இவர் சிங்கமாக எங்கும் திரிந்த தைச் சேக்கிழார், சீர்நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை;. சார்தலும்மற் றதுஅறிந்த சைவர் எல்லாம் ஆர்கலியின் கிளர்ச்சிஎனச் சங்கு தாரை அளவிறந்த பல்லியங்கள் முழங்கி ஆர்த்துப் பார்குலவு தனிக்கானம் சின்னம் எல்லாப் பரசமய கோளரிவந் தான்என் று.ாத என்று பாடியுள்ளார். 6