பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காப்புப் பருவம் நோயைத் தீர்க்கச் சுந்தரரையே ஏவினர். இங்ங்னம் செய்தது இருவரையும் ஒன்று படுத்தற்கே ஆகும். சுந்தரர் தம் நோயைத் தீர்க்க வருகின்ருர் என்று அறிந்த கலிக்காமர் சுந்தரர் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற காரணத்தால் கத்தி கொண்டு வயிற்றைக் கிழித்துக் கொண்டார். சுந்தரர் இந்த நிலையினே அறிந்து தாமும் தம்மை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, இறைவர் திருவருளால் கலிக்காமர் எழுந்து சுந்தரர் இறக்கத் துணிந்த நிலை அறிந்து வாளேப் பற்றினர். சுந்தரர், நாயனர் காலில் விழுந்தார். இருவரும் நண்பர் ஆயினர். இருவரும் திருப்புன்கூர் சென்று இறைவரைப் பணிந்து போற்றினர். திருமூலர் : இவர் ஒரு சிவயோகியார். கயிலையிலிருந்து புறப்பட்டுத் தென்னகம் வந்தனர். வரும் வழியில் திருவா வடுதுறை அருகே வந்தபோது, பசுக் கூட்டங்கள் வருந்தும் நிலையினைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது, இடையன் இறத்து கிடப்பதை உணர்ந்து, அவன் உடலில் தம் உயிரைப் புகுத்தித் தம் சரீரத்தை ஒரிடத்தில் வைத்தார். தம் உயிர் இடையன் உடலில் புகுந்ததும் ஆடுமாடுகள் ஆனந்தம் உற்றன. அவற்றை நன் முறையில் மேய்த்து மாலையில் அவற்றைச் சாத்தனுாருக்கு அனுப்பி விட்டனர். பின் தம் உடலைத் தேடினர். அது கிடைக்கவில்லை. இஃது ஆண்டவன் திருவருள் போலும் என்று எண்ணித் திருவாவடு துறையில் அரசமரத்தடியில் யோகம் இருந்து சைவ ஆகமப் பொருள்களை ஆண்டுக்கு ஒவ்வொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினர். அதுவே, திருமந்திரம் என்பது. இடையன் பெயர் மூல ன். ஆகவே, இவர் மூலன் உடலில் புகுந்தமையில் மூலர் என்ற பெயர் பெற்ருர். இவரது சிறப்பு நோக்கித் திருமூலர் எனப்பட்டார். இவரது நூல் சைவத் திருமுறையில் பத்தாவதாகத் திகழ்கிறது. தண்டி அடிகள் : இவர் சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்தவர். பிறவிக் குருடர். என்ருலும் தியாகரை அகக் கண்ணுல் அஞ்செழுத்து ஓதி வழிபட்டவர். சமணர் வாழ்ந்த