பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 89 வர்கள் சோழர்கள். அவர்கள் வளமுடைய நாட்டிற்கு உரியவராய் விளங்கினமையினுல்தான் வனவர் எனப்பட்டார். ஈண்டு வளவர் கோன் என்பான் அநபாய சோழன் ஆவான். அனபாயன் சிந்தாமணியில் ஈடுபட்டிருந்தமையின் சேக்கி ழார் கண்டு, அவனே அதில் ஈடுபடாதவாறு செய்து சிவனடி யார்களின் வரலாற்றை எடுத்து மொழிந்து தம்பக்கம் திருப்பி அவ்வரலாற்றின் அடிப்படைகளை எடுத்துப் புகன்ருர். இதனேக் கீழ்வரும் திருத்தொண்டர் புராண வரலாற்று நூலில் தெளிவுறக் காணலாம். இளவரசன் தனைநோக்கிச் சமணர் பொய்ந்நூல் இதுமறுமைக் காகாதிம் மைக்கும் அற்றே வளமருவு கின்றசிவ கதைஇம் மைக்கும் மறுமைக்கும் உறுதி என வளவன் கேட்டு அவகதையாய்ப் பயன் அற்ற கதையி தாகில் அம்மையும்இம் மையும் உறுதி பயக்கத் தக்க சிவகதைஏ ததுகற்ற திறமைப் பேரார் சீவகசிந் தாமணிபோல் இடையில் வந்த நவகதையோ புராதனமோ முன்னுரல் உண்டோ நானிலத்தில் சொன்னவர்.ஆர் கேட்ட பேரார் தவகதையோ தவம்பண்ணிப் பேறு பெற்ற தனிக்கதையோ அடைவுறச் சாற்றும் என்ருன் செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவி கேட்கச் சேக்கிழார் குரிசில்உரை செய்வார் ஞாலத் தம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல் நம்பிபதி ளுெருதிருப்பாட் டாகச் செய்த நலமலிதொண் டத்தொகைக்கு நாரை யூரில் தும்பிமுகன் பொருள் உரைக்க நம்பி ஆண்டார் சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதி செய்தார் என்ற பாடல்களில் காண்க . இதனேயே ஈண்டுக் கண்டு ஒழித்து ஆவது இதுவே என்று தொண்டர்தம் மகத்துவம் கருத உய்த்து' என்னும் தொடரில் அமைந்த கருத்தாகும்,