பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 93 சேக்கிழார் சென்னிக்குத் தொண்டர் சிறப்புணர்த்தி மோக்கநெறி தந்தார் முருகேசா என்று எடுத்து மொழிகிறது. இவை அனத்தையும் கருத்துள் கொண்டே ஈண்டு ஆசிரியர். 'பார்கொண்ட மன்னர் அல்லவை நீக்கி நல்லவை பரித்திடச் செயல் அமைச்சர் பண்பு எனல் தெரித்த குன்றத் துார் உதித்த எம்பரமன் என்றனர். ஆசிரியர் சேக்கிழாரை 'எம்பரன்' என்ற தல்ை இவர்க்கு அவர் பால் இருந்த ஈடு பாட்டின் இயல்பை நன்கு தெரிந்து கொள்ளலாம். 'வார்கொண்ட வனமுலை எனும் கவி' என்பது, வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கள் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேயல சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேல்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்னும் திருத்தொண்டத் தொகையின் ஆருவது பாடல் ஆகும். தவராச சிங்கமாகிய தாயுமானவர் சைவ சமயத்தின் ஏற்றத்தைப் பலவாறு எடுத்து இயம்பியுள்ளார். சைவ சமய மேசமயம் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டு பொய்வந் துழலும் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் தெய்வச் சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்திரே