பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 97 புகழ் என்னும் அடை உற்றவர் சிறம்புலி நாயஞர். இவர் புகழ் என்னும் அடையுற்றதைச் "சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலி' எனச் சுந்தரர் தம் பாட்டில் சொல்லி இருப்பதைக் காண்க. இவர் சோழ நாட்டில் திருவாக் கூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர். அடியவர்கட்கு அமுது ஈந்து வந்தவர். பொருளையும் கொடுத்து வந்தவர். இறை வனது ஐந்து எழுத்தை ஒதியும் யாகம் செய்தும் இறைவன் திருவருளேப் பெற்றவர். இவர் புகழ் என்னும் அடையினப் பொருந்தப் பெற் றவர் என்பதை நன்முறையில் எடுத்துச் சேக்கிழாரும், ஆலேசூழ் பூகவேலி அத்திரு ஆக்கூர் தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தின் உள்ளார் நீலமார் கண்டத் தெண்தோள் நிருத்தர்தம் திருத்தொண் டேற்ற சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தனில் சிறந்த நீரார் என்று மொழிந்திருப்பதைக் காண்க. கொடை என்னும் அடையினப் பெற்றவர், கழறிற்று அறிவார் நாயனர். இதனைத் திருத் தொண்டத் தொகையில் 'கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்’ எனச் சிறப்பிக் கப்பட்டிருதலைக் கொண்டு அறியலார். இவர் சேர நாட்டில் கொடுங்கோளுரில் சேரர் மரபில் பிறந்தவர். இவரது பெயர் பெருமாக்கோதை என்பது. இவர் திருவஞ்சைக் களத்தலத்தில் தொண்டு புரிந்து வந்தார். அந்நாளில் செங்கோற்பொறையன் அரச பதவி துறந்து வனம் ஏகினன். அப் பதவியை ஏற்க அமைச்சர்கள் பெருமாக் கோதையாரை வேண்டினர்கள். இதுவும் சிவ பெருமான் திருவருள் என்று கொண்டு, இறைவரிடம் "யாரும் 7