பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 115 திருவாரூர்: பிறந்தார். சிவகணத்துள்ளவர். இவர் சேவடிகளே செல்வநெறி அடையச் செழுநெறி ஆகும். முப்போதும் திருமேனி தீண்டுவார். இவர்கள் ஆகம நெறியில் வணங்கி அர்ச்சிப்பார் சிவளுர் உலகில் அழியாச் செல்வத்தில் அமர்ந்தவர். முழுவீறு பூசிய முனிவர்: உலகு கலங்கினும் ஊழி திரியினும், உள்ளம் ஒருகாலும் விலகுதல் இல்லாதவர். திருவாரூர் அமர்ந்த அரனடிக்கீழ் விளங்கும் வெண்ணிற் றைத் தம் திருமேனியில் அணிபவர். அப்பாலும் அடிச்சார்ந்தார்: இறைவன் திருவடிகளில் சுந்தரர்க்குப்பின் அன்பு பூண்டு சார்பவர்கள். சிவனர் கனத்தைச் சார்ந்தவர் நம் செழுந்தவர். பூசலார்: திருநின்றவூரினர். இறைவனுக்கு ஒரு கோயில் எப்போது கட்டிமுடிப்பது என எண்ணியவர்; அவ்வெண் னத்தை உறக்கம் இன்றி, இரவும் பகலும் எண்ணி இறை அருள் பெற்றவர். மங்கையர்க்கரசியார்: பாண்டிமாதேவியார். மானி யார். தம் கணவரைது வெப்புநோய் கண்டு, அது பொருது சம்பந்தர்க்கு அறிவித்து அவரால் அருகர்க்கு அழிவு தேடியவர். நேசனுர்: சிவனடியைத் தம் உள்ளத்தில் கொண்டவர். சிவனடியார்க்கு ஆடை கோவணம் நெப்து கொடுத்தவர். காம்பிலி நகரத்தவர். சாலிய மரபினர். கோச்செங்கட் சோழர்: முன் பிறப்பில் சிலந்தியாய் இருந்தவர். அந்நிலையில் இறைவர்க்குப் பந்தர் வேய்ந் தவர். பின் சோழர் மரபில் பிறந்து அரசை மேற்கொண்டு ஆலயங்கள் கட்டுவித்தவர். திருச்சிற்றம்பலத்திற்குச் செம்பொன் அணிந்தவர். சிவலோகம் அடைந்தவர். இல்லே பினேச் சூழ வேதம் வளர்த்தவர்.