பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காப்புப் பருவம் வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன் மல ராகும் நயனம் காய்கண பிஞல்இடந் தீசன்அடி கூடு காளத்தி மலையே என்றும் பாடி, அவர் இறைவர்க்குத் தம் கண்ணே இடந்து அப்பியதையும், வாயில் நீர் கொணர்ந்து இறைவனே முழுக் காட்டியவேடர் என்பதையும் அறிவித்துள்ளனர். தமிநந்தி அடிகளைக் குறிப்பிடும்போது, ஆவிதனில் அஞ்சொடுக்கி பங்கனன் என் ருதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி அடிகள் என்றருளியுள்ளனர். கோச்செங்கட் சோழரைப் பாடும்போது, சிலந்தி செங்கட் சோழன்' என்றும், 'செம்பியர் செய்ய கண் இறை செய்த கோயில்” என்றும், பாடி, அவர் சோழர் மரபினர்; முன் பிறவியில் சிலந்தியாக இருந்தவர், கோயில் பல கட்டி யவர் என்பனவற்றை அறிவித்துள்ளனர். முவேந்தர் தலைவன் என்ற குறிப்பினை, 'தென்னன் கோழிவஞ்சியும் ஒங்கும் செங்கோவி ன்ை மன்னன்' 'சீரினல் அங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்’ என்றும் பாடியிருத்தலால் அறிக. முருகநாயனுரைப்பற்றிக் குறிப்பிடுகையில், தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறியும் முருகன் என்றும் பாடி அவர்காலேயில் மூழ்கி மலர், சந்தனம், நறும் புகை இவற்றை இறைவர்க்கு நல்குவர் என்பதையும் குறிப்பறிந்து ஏவல் செய்வதையும் குறித்துள்ளனர்.