பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 129 கருங்கடலைக் கைநீத்துக் கொளஎளிது முந்நீர்க் கடற்கரையின் நொய்மணலை எண்ணிஅள விடலாம் பெருங்கடல்மேல் வருந்திரையைஒன்றிரண்ட்ென்றெண்ணிப் பிரித்தெழுதிக் கடைஇலக்கம் பிரித்துவிடல் ஆகும் கருங்கடலின் மீனேஅள விடல் ஆகும் வானத் தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தைஅள விடநம் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். சேக்கிழார் வாக்கில் உண்மை மொழி மிளிர்தல் காண லாம். எல்லாம் தாம் அறிந்து மொழிவதாகக் கூறிற்றிலர். தமக்கு எது தெரிந்ததோ அதை மட்டும் அவர் தெரிந்து கூறியவர். இதற்கு அவரது மொழிகளே சான்முக இருக் கின்றன. கண்ணப்பர் வரலாற்றைக் கூறத் தொடங்கும் போது, உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பு நம்பெருமான் செய்தபணி நாம்தெரிந்த வாறுரைப்பாம் என்றனர். இவ்வாறே ஆனய நாயனர் வரலாற்றைக் கூறும்போது "மன்னும் ஆ ன ய ர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன்” என்று பாடியுள்ளார். இதல்ை இவர் உண்மை யினே ஒளிக்காமல் கூறியவர் என்பது தெளிவு. இதல்ை இவரை மெய் அறிஞர் எனல் மெய்ம்மைதானே! கதிர் என்பது சினையாகு பெயராய்ச் சூரியனே உணர்த் தும். சூரியன் எல்லாராலும் அறியப்பட்டவன். அவனைப் போலச் சேக்கிழார் குடியில் பலர் தோன்றினும் இவரே அக் குடியின் விளக்கமாய் இருந்தமையின் இவரைக் 'குலக் கதிர்' என்றனர். சேக்கிழார் குடியில் பலர் சேக்கிழார் என்ற 9