பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 காப்புப் பருவம் ஏரால்எண் திசைவளர்க்கும் புகழ்வே ளாளர் ஏரடிக்கும் சிறுகோலால் தரணி ஆளச் சீராரும் முடிஅரசர் இருந்து செங்கோல் செலுத்துவர்வே ளர்புகழ் செப்ப லாமோ என்றும் பாடிச் சிறப்பித்தல் காண்க. கம்பரது நூலாகிய, ஏர் எழுபதிலும் வேளாளர் மேம் பாட்டை நன்கு காணலாம். அவற்றைப் பின்வரும் பருவங் களில் எடுத்துக் காட்டுவோமாக. இன்னுேரன்ன காரணங் களால் 'மேம்பட்ட வேளாண் குலம்’ எனப்பட்டது. இத் தகைய குடியில் தோன்றியவர் சேக்கிழார் ஆதலின் 'வேளாண் குலக் கதிர் எனப்பட்டார். ஒரு சிலர் சேக்கிழார் மீது குற்றம் சாற்ற முற்படு கின்றனர். அவர் காட்டும் குற்றம் பெரிய புராணத்துள் இறைவர் பிராமணராகவே வருகின்ருர், வேறு மரபினராக வந்திலரே என்பது. அவர்கள் பெரிய புராணத்தை முற் றிலும் ஐயம் திரிபர அறியாத குற்றமே ஆகும். திருநீல கண்டர் இல்லத்திற்கு 'அருட்சிவ யோகியாகி வந்தார் என்றும், இளேயான்குடி மாறர் இல் லத்திற்கு 'நற்ற வத்தர் வேடமே கொடு” வந்தார் என்றும், திருக்குறிப்புத் தொண்ட ரிடம் வ்ந்தபோது 'மாதவ வேடம் தாங்கி” வந்தார் என்றும், சிறுத்தொண்டர் இல்லத்திற்குச் 'சித்தம் மகிழ் வயிரவராய்” வந்தார் என்றும் இவ்வாறு பாடியுள்ளதையும் அவர்தம் நூலில் காண்பாராக. ஆகவே, அவர் 'விமலர்' என்பதில் ஐயம் உண்டோ? மேலும், இயற்பகையார் இல்லம் போந்தவர் உளத்தின் நிலை இன்னது என அறியாத நிலையில், வந்தவர் வேதியராயினும் துார்த்த வேதியராய், (காமுகராகிய வேதியராய்) வந்தார் என்பதை எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார்! ஆய நுண்பொருள் ஆகியும் வெளியே அம்ப லத்துள்நின் ஆடுவார் உம்பர் நாய கிக்கும்.அது தெரியவோ பிரியா நங்கை தான்.அறி யாமையோ அறியோம்