பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 157 இறைவன் இவ்வைந்தொழிற்களைத் தானே செய்வ தோடின்றி, இத்தொழிற்களைச் செய்யும் அதிதேவர்களையும் அமைத்து, அல்வத்தொழிலைச் செய்யுமாறு ஏவித் தான் மேல் ஓர் அதிகாரியாகவும் நிற்கின்ருன் என்பதைப் பிரபுலிங்க லீலை, ஆக்குறும் செயல தொன்றே அயன் தனக் காக்க லோடு காக்குறும் செயல் இரண்டும் கண்ணனுக் காக்கல் காத்தல் போக்குதல் என்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன் என்று கூறுகிறது. மகேஸ்வரன் சதாசிவன் ஆகிய இருவர் பற்றி இப் பாடலில் குறிப்பு இல்லை ஆயினும் இனப் பற்றி அவர்களேயும் இணைத்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறைவன் மலைமங்கையைத் தன்பால் கொண்டிருந் தாலும், அவன் காமவிகாரி அல்லன். இதனை ரதி நன்கு வெளிப்படுதித்தித் தன் கணவனை மன்மதம் இறந்தபோது புலம்பிய புலப்பலுள் விளக்கியுள்ளனள். தேயமொடு மறைபயிலிலும் திசைமுகனைப் புரந்தரனே நின்னேத் தந்த மாயவனே முனிவர்களை யாவரையும் நின்கணையால் மருட்டி வென்முய் ஆயதுபோல் மதிமுடித்த பரமனேயும் னைந்திவ்வாறழிவுற் றயே தீயழலின் விளக்கத்தின் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்ருே என்ற பாடலைக் காண்க. மன்மதனும் தான் இறப்பதற்கு முன் தேவர்களிடம் இறைவன் மையலுக்கு உள்படாதவன் என்பதை,