பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 167 கழற்சிங்க மன்னன்' எனப்பட்டார். கழற்சிங்கர் மன்னர் என்பது திருத்தொண்டத் தொகையில், 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்கன்' என்று வருதலாலும், பெரிய புராணத்துள், படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார் கொடிநெடுந் தானே மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார் என்பதாலும் அறியலாம். இடங்கழியார்: இவர் கோட்ைடில் கொடும்பாளுரில் வேளிர் குலத்தில் ஆதித் தன் குடியில் பிறந்தனர். அரச மரபினர். இவர்தம் ஆட்சியில் கோயில் பூசைகளும் சைவமும் குறைவின்றித் தழைத்து ஓங்கின. இவர் ஆட்சியில் ஒரு சிவனடியார் அடியார்கட்கு உணவூட்ட நெல் இல்லாமை யால், இவர் அரண்மனேயில் திருடியபோது அகப்பட்டுக் கொண்டார். இடங்கழியார் சிவனடியாரை 'ஏன் நெல்லைத் திருடினிர்கள்?’ என, அவர், 'சிவனடியார்கட்கு அன்னம் இட' என்று கூற, இடங்கழியார் உடனே தம் நெற் கூட்டை யும், நிதிச் சாலேயையும், பொருட் சாலையையும் திறந்து சிவனடியார்கள் முகந்து செல்லலாம் எனப் பறை அறையச் செய்து, தம் பொருள்கள் சிவனடியார்கட்காக எடுத்துச் செல்லப்படுதலைக் கண்டு மகிழ்ந்தவர். இந்நிலையில் பன்னெடுங்காலம் அரசு செய்து இறையடியுற்றர். இவரை, 'மன்னிக்கழியா மடங்கழி இடங்கழி' என்று கூறி இருத்தலைச் சிறிது சிந்தித்தல் சிறப்பாகும். ஈண்டு 'மன்னிக்கழியா மடம்” என்பது, ஆணவ மலத்தை ஆகும். இஃது ஆன்மாவோடு பொருந்திப் பிரியா நிலையுடையது என்பது சித்தாந்த நூற்களின் கருத்து. இதனைச் சிவஞான சித்தியார்,