பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 காப்புப் பருவம் ஒன்றதாய் அநேகசக்தி உடையதாய் உடனய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத்_திருத்துவத்தை • * நிகழ்த்திச்செம் பினில்க ளிம்பேய்ந்து என்றும்அஞ் ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே என்று கூறுதல் காண்க. சிவஞான போத வெண்பா, நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னில்களிம்பும் சொல்லில் புதிதன்று தொன்மையே என்று கூறுகிறது. ஆகவே, இது மூலமலம் எனப்படும். ஆணவமலம் உயிருடன் கலந்து இருப்பினும் தன்னையும் பொருளையும் காட்டாது. இதனைத் திருவருட்பயன், ஒருபொருளும் காட்டா திருள்: உருவம் காட்டும்; இருபொருளும் காட்ட திதி என்று அறிவிக்கிறது. இவ்வாணவ மலம் உயிருடன் மன்னில் இருத்தலைத் தாயுமானவரும், ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ் ஞானத் தானுவிளுே டத்துவிதம் சாறும்நாள் எந்நாளோ என்றும், ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாகிக் காணவத்தைக் கப்பாலைக் கானுநாள் எந்நாளோ என்றும்,