பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 171 ஒரு பொற் காசை இங்கு வைப்போம். அதுகொண்டு நலனுற வாழ்க" என்று அருளினர். அவ்வாறே தினமும் பொற்காசு பெற்றுத் தம் வழிபாட்டை இடையருது செய்து இறுதியில் ஈடில் வீட்டின்பம் எய்தினர். இவர் வரலாற்றைச் சுந்தரர், அகத்தடிமை செய்யும் அந்தணன்தான் அரிசில் புனல்கொண் டுவந்தாட் டுகின்ருன் மிகத்தளர் வெய்திக் குடத்தை யும்.தும்முடி மேல்விழுத் திட்டுநடுங் குதலும் வகுத்தவ னுக்கு நித்தம் படியும்வரும் என்ருெரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைபுகச் செய்துகந் தீர்பொழில் ஆர்திருப் புத்துர்ப் புனிதன் நீரே என்று பாடியிருத்தலே அறியலாம். இந்நாயனர் ஈண்டு, 'அரில்விடல் சூழ்ந்த சிந்தை ஒர் இகழ்த்துணை பெருதுற விளங்கும் புகழ்த் துணை' எனப் புகழப்பட்டுள்ளனர். 'அரில் விடல் சூழ்ந்த சிந்தை' என்பதன் பொருள், குற்றம் நீங்கப்பட்ட மனம் வாய்ந்தவர் என்பது. குற்றம் இல்லாத மனம் வாய்ந்தவர் ஆதலி குல்தான் இறைவரைப் பஞ்ச காலத்திலும் வழிபட்டு வந்தனர். இதனைச் சேக்கிழார், தங்கோனைத் தவத்தால்ே தத்துவத்தின் வழிபடுநாள் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்து எங்கோமான் தனைவிடுவேன் அல்லேன் என் றிராப்பகலும் கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண் டருச்சிப்பார் என்று பாடினர். இவர் இறைவர் முடிமேல் குடத்தை போட்டது இழுக் காகும் என்று சிலர் கூறக்கூடும் என்று நினைந்தே ஆசிரியர்