பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 173 தம் பெற்றேர்களையும், உற்ருர்களேயும் வெட்டி வீழ்த்தினர். ஒரு சிறு குழந்தையையும் வெட்டத் துணிந்தபோது, வாயில் காவலன் தடுத்தான். 'இது நெல்லேயுண்டவள் பாலைக் குடித்தமையின் இத்னேயும் வெட்டுதல் தக்கது' என அதனையும் வெட்டினர். இத்தகைய வீரச் செயல் புரிந்த இவர் சிவன் அருளுக்குப் பாத்திரம் ஆனர். இந்நாயனர் தம் மன்னனது பகைவருடன் பொருது வெற்றி கொண்டதால், வயம் என்ற அடைமொழி கொடுக் கப்பட்டார். இவரைச் சேக்கிழார் 'தனி வீரராம் தலைவர்' என்றும் 'வேற்றுப்புலம் பெருகத்துயர் விளைப்பப் போர் விளேத்துப் புகழ் விளேப்பார்” என்றும் கூறியுள்ளனர். மேலும், இந்நாயனர் வேளாளர் மரபில் புலிபோலத் துவங் ஒன்மையின், "வேட்புலி எனும் கோட்புலி' எனப்பட்டார். இவர் அக்குடியில் சிறந்து விளங்கியதால், சேக்கிழார், 'நாட்டியத்தான் குடி வேளாண் குலம் பெருக வந்துதித் தார்' என்கிருர் மற்றும் இவர் தம் உறவினர்களே வெட்டி வீழ்த்தியும் கூட இறைவன் இவரை விரும்பி, அன்பர் எதிர் வெளியே நின்று. 'உன்னுடைய கைவாளால் உறுபாசம் அறுத்த கிளே பொன்னுலகின் மேலுலகம் புக்கனயப் புக ழோய் நீ இந்நிலை நம் உடன் அனேக' என்று கூறி இருப்ப தால், இவர் வேட்புலி என்று சிறப்பித்தற்கும் உரியர் ஆயி ஞர். திரு என்னும் சொல், 'கண்டரால் விரும்பப் படும் தன்மை' என்று பொருள் படுதலின், இவர் உறவினர்களைத் தடிந்த நிலேயிலும், எவராலும் விரும்பப்படுபவரே என்ற கருத்தில் திருக்கோட்புலி எனப்பட்டார். சேக்கிழார், "சிங்கர் கழலிணை தொழுது போற்றி, என்றும், இடங்கழியார் கழல் வணங்கி என்றும், செருத் துணையார் துாயகழல் இறைஞ்சி” என்றும், புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி என்றும், கோட்புலியார்.அடி வணங்கி' என்றும் வணங்கி இருத்தலின், அம்மரபுபடி திரு பிள்ளை அவர்களும் "ஐவரையும் மேல்மேலும் ஏத்தெடுப்பாம்: என்றனர். (9)