பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 175 இரு-இரண்டு, பைங்கோதையர்-பசிய மாலையை அணிந்த பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்னும் இரண்டு மாதர்களே, வேட்ட-திருமணம் செய்துகொண்ட, பான்மைமுறைமை, இணங்க-பொருந்த, ஒர்-ஒப்பபற்ற சிங்கடிவனப் பகை எனும் இரு பெண்கள், பயலாமல்-பெற்றெடுக்காமல், பயந்த பெற்றெடுத்த, தொண்டர் - சுந்தரர், எழுவகை புளார்-பத்தராய்ப் பணிவார், பரமனேயே பாடுவார், சித்தத் தைச் சிவன் பாலே சேர்த்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப் போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார், பொன்-அழகிய, ஏத்தெடுத் தல்-போற்றுதல். விளக்கம் இறைவர் பிறப்பு இறப்பு அற்றவர். பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலம்பில் குறிக்கப்பட் டவர். 'பிறப்பிலார், இறப்பிலார் பினை ஒன்று இல்லார்,' 'ஈறிலாத ஈசன்' 'இறப்பொடு பிறப்பிலானே, என்று திரு முறைகளும் கூறுகின்றன. விநாயகர் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருப்பதற்குரிய காரணம் இன்னது என் பதைக் காளமேகம் குறிப்பிடும்போது தந்தை பிறந்திறவாத் தன்மையான் தன்மாமன் வந்து பிறக்கும் வன்மையினால் முந்தொருநாள் வீனுக்கு GQడ్రి! எரித்தான் மகன் மாமன் சாணிக்கு விந்திருந்தான் காண்” என்று பாடிய பாட்டும் சிவபெருமான் இறவாதவன் என்பதைக் காட்டும். இதல்ைதான் ஈண்டு நித்தராய்' எனப்பட்டார். இறைவர் என்றும் தில்லையில் நடனம் புரிபவர். இவர் நடனம் புரிந்திலரேல், உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் நடைபெரு: மக்களை ஆனந்த வரநிதியில் திளைக்கச் செய்யவே இறைவர் நடனம் புரிகின்றனர். இதனை முறையே.