பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 காப்புப் பருவம் காமல், தொழுது ஏத்தெடுத்தல் செய்வாம் என்று штt}இருப்பதைக் காணவும். சேக்கிழார் ஒவ்வோர் அடியார்களின் திருவடிகளையும் வணங்கிக் கூறும் இயல்பினர். ஆனல், தொகையடியார்களில் திருவடிகளை வணங்கிப் பாடும் முறையினைக் கைக்கொண் டிலர். 'பத்தராய்ப் பணிவார்தம் பரிசினைப் பகருவாம்' என்றும், பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்' என்றும், (சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணத்தில் இக்குறிப்பும் இல்லை.) திருவாரூர்ப் பிறந்தார்களேப் பற்றிச் செப்புகையில் 'சிறியேனுல் உரைக்கலாம் தகைமையதோ' என்றும், முப்போதும் திருமேனி தீண்டுவார்களைப் பற்றிக் கூறுகையில் 'அப்பெருந்தகையார் குலப்பெருமையாம் புகழும் பெற்றியதோ’ என்றும், (முழுநீறு பூசிய முனிவர் பற்றி இத்தகைய குறிப்புக் காணப்பட்டிலது.) ஆனால், அப்பாலும் அடிச்சார்ந்தார்களைப் பற்றிக் கூறும்போது மட்டும், 'முடியாப் பேறு பெற்றவர்தம் கழல் பரவ அடி யேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே” என்று பாடிப் பரவியுள்ளார். சேக்கிழார் இவ்வாறு அப்பாலும் அடிச்சார்ந்தார் திருவடி கட்கு மட்டும் வணக்கம் கூறி, ஏனையவர்கட்கு இவ்வாறு கூறிற்றிலரே எனில், இதற்குரிய காரணத்தையும் ஈண்டே பகருவாம். 'அப்பாலும் அடிச்சார்ந்தார் சைவ உலக அடியார்கள் மட்டும் அல்லர். எல்லா உலக அடியார்களும் ஆவார். ஆகவே, அவர்கள் சைவ மக்களுக்குப் புறம்பான வர்கள். அதனுல்தான் சேக்கிழார் வணங்கிற்றிலர்,” என்று உலகம் கூறவும் கூடும் என்று நினைந்து தம் பெருந்தகைமை தோன்றவே 'பெற்ருர்தம் கழல்பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்ததவம் பெரியவாமே” என்று பாடிக் காட் டினர். ஏனய தொகையடியார்களின் திருவடியைப் போற்று தலைக் கூருமல் போனதற்குக் காரணம், தொகையடியார்கள் பலர் ஆதலின், அவர்களின் பெருமையில் திளைத்து நின்றமை யின் தம்மை மறந்த நிலையில் சென்று விட்டனர் என்க. (10)