பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 19'? என்னவளும் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திரு நாவலூர்க்கோன் அன்னவனம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே என்பது. இப்பாட்டில் குறிப்பிடப்பட்டவர்கள் எழுவர். அவர்கள் பூசலார், மங்கையர்க்கரசியார், நேசர், கோச்செங்கட் சோழர் திருநீலகண்ட யாழ்ப்பாணர், சடையர், இசை ஞானியார், இவர்களையே திரு பிள்ளை அவர்கள் தொகை யாகப் பூசல் வித்தகர் முன் மேய எழுவோரும் என்றனர். பூசலார் தொண்டை நாட்டில் திருநின்ற ஊரிலே (இது போது தின்னனுரர் என்று வழங்கப்படுகிறது) பிராம் மனர் மரபில் பிறந்தவர். வேதாகம கலைகளைப் பயின்றவர். சிவ பக்தி, சிவனடியாரிடத்து அன்பு மிகுதியும் உடையவர் சிவனடியார்கட்கு எந்தவிதமான தொண்டுகளையும் செய்து உவந்தவர், இந் நாயனர் சிவபெருமானுக்கு ஒர் ஆலயம் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, பொருள் தேட முயன்ருர். பொருள் கிட்டிலது. அதனுல் மனத்தாலேயே கோவில் கட்டத் தீர்மானித்தார். நினேந்த வண்ணம் அடித் தலம் மேல் கட்டட அமைப்பு, கோபுரம், மதில், மற்றும் ஆலயத்திற்கு இருக்கவேண்டிய அமைப்புக்கள் அத்தனையையும் மனத்தினலேயே கட்டி முடித்தார். கோயிலைக் கட்டி முடித்ததோடு இன்றி, இறைவனே அதில் தாபிக்கும் நாளேயும் குறித்து விட்டனர். இஃது இவ்வாறு நிகழ, காஞ்சியம்பதியில் காடவர் கோன் என்பவர், தாம் ஒரு கோயிலே நிலத்தில் கட்டி, அக் கோவிலில் இறைவரைத் தாபிக்க நாளேயும் குறித்து விட்ட னர். அந்நாள் பூசலார் குறித்த நாளே ஆகும். இறைவர் காடவர் கோன் கனவில் தோன்றி, அன்பனே, திருநின்றவூர் பூசலார் கோலில் எடுத்துக் குடமுழுக்கு விழா நடத்த ஏற் பாடு செய்துள்ளார். யாம் ஆண்டுச் செல்வோம். நீ