பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 காப்புப் பருவம் நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினேந்து செய்த நன்று நீ டால யத்து நாளை நாம் புகுவோம் நீஇங் கொன்றிய செயலை நாளே ஒழித்துபின் கொள்வாய் என்று கொன்றைவார் அடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போளுர். என்று கூறினர். இதனே நன்கு உணர்ந்த காரணத்தால் 'மன்னிய சடைப் பரமர் பிற தளி மறுத்து அடைவிதம் கண்டு' எனப் - لقي سان الL இறைவர், பூசலார் ஆலயத்தில் புகுவோம் என்று காடவர் கோனுக்கு அருள் செய்த திறத்தை நாயனர் கேட்டு உள்ளம் மருண்டு பின் இறைவர் திருவருளே வியந்து, என்ன யோர் பொருளாக் கொண்டே தாம் கட்டிய மனக்கோயிலில் இருக்க வந்தமையின் பெருமகிழ்வு கொண்டனர். ஆதலின் 'உவந்த பூசல்’ என்றனர். பூசலார் பேரறிஞர். அவர் அறிவைப் புலப்படுத்த பல காரணம் கூறலாம். ஒன்று ஆலயம் கட்ட பொருள் தேடியும் பொருள் கிடைக்காதபோது மனத்தால் கட்ட முடிவு செய்தது. இதனைச் சேக்கிழார் நன்கு, " " மனத்தினில் கருதி எங்கும் எனத்தும் ஓர் பொருட்பே றின்றி என் செய்கேன் என்று நைவார் தினேப்பினுல் எடுக்க நேர்ந்து நிகழ்வுறும் நிதியம் எல்லாம் தினத்துணே முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார். என்று பாடியுள்ளனர்.