பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 காப்புப் பருவம் மையலில் மூழ்காதபடி தடுத்தாட் கொள்ள வேண்டினர். அவ்வேண்டுகோட் கிணங்கிய இறைவர், நம்பியாரூரர் திருமணத்தின்போது வந்து திருமணம் முடித்துக்கொள்ளாத படி தடைசெய்து விட்டனர். பின் நம்பிஆரூரர் இறைவன் உறைவிடங்களுக்குச் சென்று திருவாரூரை அடைந்தனர். அங்குக் கமலினியார் பரவையார் என்ற பெயருடன் பிறந்து மணப்பருவம் உற்றிருத்தனர். அவரைத் திருவாரூர் தியாகேசன் திருவருளால் மனத்தனர். பின் திருவொற்றி பூரை அடைந்து, அங்கு வந்து பிறந்த அணிந்திதையாகிய சங்கிலியாரையும் இறைவர் திருவருளால் திருமணம் செய்து கொண்டனர். இம்முறையில் இவர் வாழ்ந்து சேரமான் பெருமாள் நாயனர் நட்புப் பெற்று, இறைவர் தந்த வெள்ளையானையின்மீது திருக்கையிலைக்குச் சென்றனர்.” (11)