பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ö8 செங்கீரைப் பருவம் எறிப்ப-வீச, முறுவல்-புன்சிரிப்பு, வான்-ஆகாயத்தை நோச்சி மதில்கள் சூழ்ந்த, திண்கொண்ட-உறுதி வாய்ந்த அருள்மொழித் தேவ-அருள்மொழித் தேவர் என்னும் பெயர் பெற்றவரே. திலகன்-மேன்மையானவன். விளக்கம்: பிள்ளைத் தமிழ் நூலில் இரண்டாவது பருவமாக அமைவது செங்கீரைப் பருவம். இஃது ஐந்தாம் மாதத்தில் கூறப்படுவது. செங்கீரைப்பருவமாவது குழந்தை பொருள் விளங்காத சொற்களே எழுப்பும் பருவமாகும். அதாவது, குழந்தை ங்குவா, ங்குவா என்று ஒலி எழுப்புவ தாகும். இவ்வாறு எழுப்புமாறு கேட்கும் பருவம் செங் கீரைப் பருவமாகும். கீர்-சொல், பொருள் விளங்காத சொற் களைச் செங்கீர் எனக் கூறப்பட்டதன் காரணம், அவை குழந்தை மொழியாக இருத்தலின் என்க. குழந்தையின் மழலைமொழி பொருள் விளங்கும் நிலையில் இருக்கும். ஆனல் இந்த ங்குவா என்னும் ஒசை ஒலி வடிவில்.இன்பம் பயக்கும். மோனே, எதுகைத் தொடைகள் இன்றி வரும் யாப்பினே ஒசையினிமை கருதிச் செந்தொடை என்று கூறுவது போல ஒலி இனிமை கருதிச் செங்கீரை எனப்பட்டது. பெரிய வாச்சான் பிள்ளை செங்கீர் என்பதற்கு ஒருநிருத்த விசேஷம் என்பர். கீர்-சொல். நக்கீரர் என்ற பெயர்க் காரணத்தையும் நினைவு கொள்க செங்கீரைப் பருவத்திற்கு வேறு முறையிலும் பொருள் காண்பதுண்டு. அதுவ்ே, ஒரு காலே நிலத்தில் பதித்து, ஒரு காலைத் தூக்கித் தலைநிமிர்த்தும் இருபுறத்தும் தலை அசைத் தும் ஆடும் பருவமாகும் என்பது. இதற்கு உதாரணமாக, ஒருதாள் உந்தி எழுந்திருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந் தருள்பொழி திருமுகம் அசைய அசைந்தினி தாடுக செங்கீரை எனும் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழையும்,