பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 209 இருகைமல ரும்புவி பதித்தொரு முழந்தாள் இருத்தியொரு தாள்மேல்நிமிர்த்து இந்திரதிரு விற்கிடை தொடுத்தவெண் தரளநிரை ஏ யப்பதுதல் வேர்பொடிப்பத் திருமுகம் நிமிர்ந்தொரு குளந்தையமு தாம்பிகை செங்கீரை ஆடியருளே என்ற அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழையும் காட்டுவார். இப்பிள்ளைத் தமிழிலும், உவந்து ஏடு எழுத்தாணி கொண்டெழு திரண்டுகை அம்புவி புறப்பதித்து வண் கொண்ட ஒருதாள் மடித்துான்றி ஒருதாள் வயங்குற எடுத்துான்றி செங்கீரை ஆடி அருளே என்று கூறப்பட்டிருப்பதையும் காணலாம். செங்கீரை ஆடு வதைக் கிளி சாய்ந்தாடுவது போல ஆடுதல் என்றும் கூறுவர், அதுபோது செங்கீரை என்பது அழகிய கிளி என்று பொருள் படும். மெய்ஞ்ஞான ஒளிக்கும், பொன் ஒளிக்கும் சிதம் பரப் பொற்சபை காரணமாதலின் "ஒண்கொண்ட பொது:சைகம்’ எனப்பட்டது. மேலும், விசயாலயன் ஆதித்தன், பராந் தகன் முதலிய சோழ மன்னர்கள் தில்லைச் சித் . முகட்டையும், திருச்சிற்றம்பலத்தையும் போன்வேய்ந்தனர் ஆதலின், "ஒண் கொண்டபொது' எனப்பட்டது எனினும் ஆம். தில்லேக்கூத்தப் பெருமானுர் உலகம் உய்ய உவந்தாடும் இடம் கனகசபை, அது பொது என்றும் கூறப்படும். பொது வாவது எவர்க்கும் உரிமை உடையது என்பதாம். இப் பொதுவும் சிறப்பாகச் சைவப் பெருமக்களும், பொது வாக எல்லாச் சமயத்தவரும் வணங்கும் சபையாதலின் பொது எனப் பெயர் பெற்றது. தாயுமானு. இஃது எவர்க் கும்பொது ஆதலே, 'பகர் வரிய தில்லே மன்றுள் பார்த்த போது அங்கு என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே i4 ம்ே பலத்த்