பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 戈且l இருபுனலும் வாய்ந்த மலேயும் வருபுனலும் வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு என்று கூறியுள்ளமை கொண்டு உணரலாம். இந்தத் தன்மையைக் குன்றத்துார் பெற்றுள்ளது என்பார், வான் அளவு நொச் சித் திண்கொண்ட குன்றையம்பதி' என்றனர். ஒளவையார் ஏனேய நாடுகளைக் கூறும்போது நல் என்ற அடை கொடுக்காமல் கூறித் தொண்டை நாட்டைக் குறிப் பிடும்போது தொண்டை நன்னடு என்று குறுப்பிட்டமை யின், ஈண்டும் திருத்தொண்டை நன்குடு எனப்பட்டது. சான்ருேரை இந்நாடு பெற்றுள்ளமையின் அச்சிறப்புத் தோன்றவே திருத் தொண்டை நன்னடு எனப்பட்டது. தொண்ட மண்டலமா அன்றித் தொண்டை மண்டலமா என்பது பற்றிய கருத்து வேற்றுமை எழுந்தபோது, இராம லிங்க சுவாமிகள் தொண்ட மண்டலம் என்றே தக்க இலக் கண இலக்கிய மேற்கோள்களுடன் நிறுவிக் காட்டிஞர். அப்படிக் காட்டியபோது, தொண்டன் கண்டலம் தொண்ட மண்டலம் என்றே மரபு வழுவாமை வழங்கல் வேண்டும் என்று கூறி அதற்குப் பிரமாணமாக, முக்கணன் கனநா தர்க்கு முதன்மைத்துண் டீரன் ஆண்டு மிக்கதுண் டிரன் நாடாய்த் தண்டக வேந்தன் தாங்கித் தக்கதண் டகன்நன் நாடாய்த் தபனன்மா குலத்துச் சோழன் தொக்கதார்க் தொண்ட மான்காத் தாயது தொண்ட ளுடே என்றும் எடுத்து எழுதினர். இது, பிள்ளை யவர்கட்கு உடன்பாடு இல்லேபோலும்! எனவே தொண்டை நன்னடு எனக் குறிப்பிட்டனர் என்க. தொண்டை நாடு என்பது செங்கற்பட்டு வடஆர்க்காடு சித்துரர், முதலிய மாவட்டங்களையும், தென்னர்க்காட்டு ஜில்லாவில் ஒரு