பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 忍13 சொற்கள்- அசரீரியாக எழுந்த உலகெலாம் எனும் சொற் கள், அல்லது பொருள் நிரம்பிய நிறைமொழியாகிய பயன் நிறைந்த சொற்கள் எனினும் ஆம், விருப்பம்-விருப்பத்தால், மழவு-இளைய குழந்தைப் பருவம், “மழவும் குழவும் இளமைப் பொருள' என்பது தொல்காப்பியம் புகல்-கூறும், ట్రా!pడి)குழந்தைகள் பேசும் திருந்தாத மொழிகள், மருவு-கலந்த, உருது-அடையாது, வள்ளால்-வள்ளலே, (சேக்கிழார்) வள் ளன்மை உடையோர், சான்று-சாட்சி, ஒருவரிய தாம்-நீக்க முடியாததாம், செப்பலுற்றபொருள் என்ற முதலேயுடைய பெரிய புராணச் செய்யுள், எவன்-ஏன் இது வினவினைக் குறிப்பு வினைமுற்று, மழவா உவப்பதும்-குழந்தையாகக் கொண்டு மகிழ்வதும் , திருவம்-செல்வம். விளக்கம்: 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பது ஒளவையார் வாக்கு. மேலும், தொண் டர்கள் சிறந்த முனிவர்களாலும் வாழ்த்தத்தகுந்த பெருமை சான்றவர்கள். இதற்குச் சான்ருக உபமன்யு முனிவர் சுந்தரரை வணங்கியதனுல் அறியலாம். உபமன்யு முனிவர் தம் திருவாயால் 'நம்பி ஆரூரன் நாம் தொழும்தன்மை யான்' என்று கூறியதனுல் உணரலாம். பெருமையால் தம்மை ஒப்பார் பேனலால் எம்மைப் பெற்ருள் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்ருர் அன்பினுல் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்ருர் இவரை நீ அடைவாய் என்று நம்பி ஆரூரருக்கு அடியவர்களின் பெருமையினே இறைவனுர் எடுத்து மொழிந்தனர் எனச் சேக்கிழார் பெருமானுரே எடுத்து மொழிந்துள்ளனர். இதனை உட் கொண்டேதான் பொருவரிய தொண்டர்கள் என்று ஈண்டுச் சிறப்பிக்கப்பட்டனர். மேலும், சேக்கிழார் தமது