பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 248 என்று குறிப்பிட்டிருப்பதால் அடியார் தொகை பற்பல ஆதலின், 'ஆயிரம் தொண்டர் வரலாறு வாய் மலர்ந்தவ' என்றனர். கரிகால் சோழன் தொண்டை நாட்டைவளமாக்கி நாற் பத்தெண்ணுயிரம் குடிகளைக் குடிபுகுந்து வாழச் செய்தவன். அக்குடிகளுள் சிறப்புக்குரியவராகக் குறிப்பிடத் தக்கவை புரிசைகிழான், வெண்குளப்பக் கிழான்,சேக்கிழார், கூடல் கிழான் என்பவர்களின் குடிகள் ஆகும். சேக்கிழான் என்பதன் பொருள் எருதுகளின் துணை கொண்டு வயல்களே உழுது வாழும்வேளாளனைக் குறிப்பதாகும். இச்சேக்கிழான் குடியே முதல் முதல் தொண்டை நாட்டில் குடியேறிய வேளாள மரபாகும். இம் மரபினர் பல கோட்டங்களில் குடியேறினர். இப்படிக் குடியேறியவர்களுள் நமது சேக்கிழார் தலைசிறந்து விளங்கி வேளாள குலத்தின் பெருமையை விளக்கியதால் 'இவரை வேளாள குலதிலக' என்று போற்றினர். (16) 6. தோம்பல உடையேம் பிறவியை அஞ்சேம் சு டர்தின் சினகரம்முன் து கேம் மெழுகேம் இரவும் பகலும் துதியேம் ஆயினும் நாம்பல தேவரை நண்ணேம் எண்ணேம் தயவேம் வியவேமால் நாள் மலர் பலகொடு நின்அடி ஏத்தி நயத்தலை மேற்கொண்டு கூம்பல்செய் கையேம் எய்யேம் இதனில் கோமான் நீஅருளும் கூலியெ வன்கொல் அவசயது நல்கில் குலாவும் உவப்புறுவேம் ஆம்பல் அவாவுதல் மேய புயாசல ஆடுக செங்கீரை ஆர்.அருள் ஆகர சேவையர் காவல ஆடுக செங்கீரை