பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 249 வேளாளர் மாந்தர்க்கு உழுதுரண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இங்கனம் உழுதுண்டு வாழும் வேளாளர்கட்குள் உழுதுண்ணும் வேளாளர், உழுவித் துண்ணும் வேளாளர் என இருவகையினர் இருத்தலின், அவர்களுள் சேக்கிழார் உழுவித்துண்ணும் மரபினருள் ஒருவர் என்பதை நினைப்பிப்பார்போல் 'சேவையர் காவல' என்றனர். அநபாயன் சைவகை இருந்தும், சமண நூலாகிய சிந்தாமணியில் ஈடுபட்டிருந்தான். அந்தோ! புறச்சமய நூாலேக் கேட்டால் இம்மைக்கும் அம்மைக்கும் நன்மை ஏற்படாதே என்ற அருளுள்ளம் காரணத்தால் எண்ணிச் சிவனடியார் வரலாற்றைக் கேட்குமாறு செய்த திருவுள்ளம் காரணமாகச் சேக்கிழார் ஆர் அருள் ஆகர என்று கூறப் பட்டார். 'வளவனும்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக்கதையை மெய்யென்று வரிசை கூற உளமகிழ்ந்து பலபடப்பா ராட்டிக் கேட்க உபயகுல மனிவிளக்காம் சேக்கி ழார்கண் டிவைரசன் தனைநோக்கிச் சமணர் பொய்நூல் இது மறுமைக் காகாதிம் மைக்கும் அற்றே வளமருவுகின்றசிவ கதைஇம் மைக்கும் மறுமைக்கும் உறுதி என வளவன் கேட்டு' என்ற சேக்கிழார் புராணப் பாடலையும் காண்க. (17)