பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 251 டார். வேளாளர் குலமே பொய்கூருக் குலமாதலின், பொய்யாப் பெருவாழ்வே எனப்பட்டார். இவர் வாக்கிலும் பொய்வராமையின் இல்வாறு எனப்பட்டார் எனினும் ஆம். மணிகள் ஒன்பான் வகைப்படும். அவற்றுள் முன்னர் வைத்து எண்ணப்படுவது வைரம் ஆகும். அதுவே மணி என் னும் பெயர்க்கும் உரியது. அதற்கு அடுத்தாற்போல் சிறப் புக்குரியது முத்து. வைரத்தைக் குறிப்பிடுகையில் நலங்கேழ் ஒளி என்றனர். இந்திரசாசத்து இகல்ஒளி என்றும் கூறி ஒளியின் சிறப்பினைக் கூறுவர். இங்கு ஆசிரியர் பொங் கொளி மணியே என்றனர். மணியை யாரும் விரும்பி ஏற்றுப் பெருமையுறுதல்போல், சேக்கிழார் பெருமாளுரையும் சிறப் பாகச் சைவ உலகமும் பொதுவாக ஏனே உலகமும் போற்றிப் புகழ்தலின், பொங் கொளிமணியே என்றனர். Dr. H. W. Schomerus என்பவர் ஜர்மானிய மொழியில் பெரிய புராணத்தை மொழிபெயர்த்துள்ளார். ஆகவே, சேக்கிழார் ஒவ்வொருவரும் விரும்பும் மணிபோல் இருத் தலைக் காண்க. சேக்கிழார் எதையும் ஒளிமறைவு இன்றிக் கூற வல்லவர். அடியார்கள் ஒழுக்கநெறியில் வழிவினுல் அதனே யும் கூறியே விடுவர். திருநீலகண்டரைப்பற்றிக் கூறுகையில், 'இளமை மீதுார இன்பத்துறையினில் எளியரானுர்” என்று அவரது பரத்தமையைப் பற்றிக் கூறியதைக் காண்க. ஆகவே, இவரைப் பொய்யாப் பெருவாழ்வே என்றனர். முத்துக்களுக்கு நான்கு பெரும் குற்றங்களும், ஆறு நடுத் தரக் குற்றங்களும் உண்டு என்று ஸ்மிருதி ஸ்ாரோத் திர நூல் கூறுவதாக நவரத்தின ஆராய்ச்சி அறிஞர் திருவாவடு துறை T. S. வைத்தியநாதன் அவர்கள் தமது நவமணிகள் என்னும் நூலில் கூறியுள்ளனர். அவர் காட்டியுள்ள குற்ற முடைய முத்தைப் போன்றவர் அல்லர் சேக்கிழார். இவர் 'பொள்ளலில் முத்து ஆவார். கம்பர் ராமனேக் கண்ட வீதி மாதர்கள் காமுற்றனர் என்பதைத் தெள்ளத் தெளியப் பாடியுள்ளார்.