பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 271 முனி-ஒப்பற்ற வசிஷ்ட முனிவர், சுரபி-கர்மதேனு, நயக்கயாவரும் விரும்ப, தீம்-இனிய, ஒடுபு-ஓடும்போது, செப்பு என்னும் வாய்பாட்டுவினை எச்சம், கூபம்-கிணறு, நயம்அழகு, இனிமை, கிளர்-விளங்கும், கால்-வாய்க்கால், நிறையா-நிறைத்து, ஆக்குபு-செய்தபோது, மூரி-வின்மை மிக்க, புந்தி-மனம், அவாவ-விரும்ப, மாயோன்-திருமால், புரி-விரும்பும், கண்துயில் இடல்-உறங்கும் இடமான திருப் பாற்கடல், புகல்-சொல்க, ஆய-ஆராயும்படி, பொலிவிளங்கும், தண்டக நாட-தொண்டை நாட்டுத் தலைவ, அந்தி மதி-அந்திக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனே, அண்ணல்-பெருமையில் சிறந்த சிவபெருமான். விளக்கம்: நந்திமலேயாவது நந்தி துர்க்கம் என்பது. இது மைசூர் ராஜ்யத்தில் உள்ளது. இம்மலைமீது வசிட்டரது தெய்வப் பசு தனது பாலேப் பொழிந்தது. அதுவே ஆருக ஒடிப் பாலாருக ஆயது. மலையினின்று ஓடிவரும் நதி பள்ள முள்ள இடங்களில் படிந்து நிரப்பிச் செல்லும் இயல் புடையது. ஆதலின், இவ்வாற்று நீரும் இடையில் தன்முன் அகப்பட்ட கிணறு, ஏரி, குளம், கால்வாய், ஒடை முதலிய வற்றை நிரப்பிச் சென்றது. இதுபற்றி ஈண்டு, 'நந்திவரைத் தலே *** பலவும் நிறையா' எனப்பட்டது. சேக்கிழாரும் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் பாலாற்றின் தோற்றத்தையும் செயலேயும் பற்றி, துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொசிபால் பொங்கு தீர்த்த மாய் நந்திமால் வரை மிசைப் பொழிந்தே அங்கண நித்தினம் சந்தனம் அகிலொடு மணிகள் பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி,” என்று பாடி யுள்ளதைக் காண்க. வசிட்டரிடம் இருந்த தெய்வப்பசு பொழிந்த பாலே பாலாறு ஆயது என்பதைக் கந்த புராணமும்,