பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தாலப் பருவம் அம்முறை போல ஈண்டுள அன்னம் இப்பிகள் ஈன்ற முத்துக் குவியலில் சென்று வீற்றிருந்த நிலை 'குவியல்மேல் இவர்ந்து’ என்று கூறப்பட்டுள்ளது. பறவைகள் குளங்களில் படிந்து, பின் இறகுகளை உலர்த்திக் கொள்ளும் காட்சியினை அப்பரும் அழகுற, - குருகினம் கூடி ஆங்கே கும்மலித்து இறகுஉலர்த்தி மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரத் தடிகளாரே என்று பாடினர். அதுபோல இங்கு அன்னங்கள் குளத்தில் மூழ்கித் தம் இறகுகளையும் உடம்பையும் உலர்த்திக் கொள்ளச் சென்ற காட்சியை "ஒதிமம் நீர் குடைந்து * மேல் இவர்ந்து மருவி முதிராவெயில்காய' என்று கூறினர். வெயில் காயச் சென்ற அன்னங்கள் முத்துக் குவியவில் வீற்றிருப்பதைக் கண்ட உழவர்கள் அன்னத்தின் முட்டை களை முத்துக்கள் என்று மயங்கி வாரிக் குவித்தனர் என்று தம் அறியாமையைப் பற்றி நொந்து கொண்டனர். இதனையே ஈண்டு 'களமர்*நானும்” என்றனர். இது மயக்க அணி. இங்ங்ணம் இரண்டுக்கும் உரிய வேறுபாட்டை உணராமைக் குக் காரணம் அக்களமரது கட்குடியே ஆகும் என்பதையும் உடன் கூட்டிக் கள் குடியினல் அறிவு மயங்கும் என்பதையும் அறிவித்த திரு பிள்ளை அவர்களின் நுண்ணறிவை நாம் பாராட்டுதல் வேண்டும். கள்ளுண்பவர் நிலையினைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ள கூற்றினேயும் ஈண்டு நினைவுபடுத்திக் கொள்வோமாக. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கள் காதல் கொண்டொழுகு வார் என்பது அக்குறள். ஆகமம், காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், குக்குமம், சகச்சிரம், அம்சுமான், சுப்பிர