பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 தாலப் பருவம் என்றும் சிலப்பதிகாரமும், செண்டு கொண்டுகரி காலனெடு காலில் இமயச் சிமய மால்வரை திரித்தருளி மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்கஇது என்று முதுகில் பாய்பு லிப்பொறி பொறித்தது மறித்த பொழுதே என்றும் கலிங்கத்துப்பரணியும் கூறுவன இதற்கு எடுத்துக் காட்டுக்கள். சேக்கிழாரும் சோழர் கொடி புலிக்கொடி என்பதையும், அதனே இமயத்தில் நாட்டிய பெருமை சான்றவர்கள் சோழர்கள் என்பதையும், பாட்டியல் தமிழ்வரை பயின்ற எல்லையுள் கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில் சூட்டிய வளர்புலிச் சோழன் என்று பாடியருளினர். இக்கருத்துக்களை உட் கொண்டே 'புல் உயர்த்தோன்” என்றனர். சைன சமயம் முத்தி இன்பத்திற்கு ஏதுவாகாது என்பதை நம் சைவத் திருமுறைகள் பல்லாற்ருலும் விளக்கியுள்ளன. அவற்றிற்குரிய சான்முகக் கீழ்வருவனவே போதுமானவை யாகும். 'கழிக்கரைப் படுமீன் கவர்வார் அமண்” 'கழியருகு பள்ளியிடமாக அடுமீன்கள் கவர்வார்' என்பன போன்ற திருமுறை வாக்குகளை உற்று நோக்கும்போது, சமணர் முத்திக்கு நேரான தொழிலில் ஈடுபட்டவர் என்பது புலனுக வில்லையா? இக்கருத்தை ஒட்டியே சேக்கிழார் பெருமாளுரும் சமயம் வாய்க்கும்தோறும் சமண் சமயத்தால் முத்தி கிட்டாது என்று அறிவித்துள்ளார். 'தவம் மறைந்து அல்ல செய்வார்’ என்றும், வீடறியாச் சமணர்' என்றும், 'காயமும் மனமும்மா கழுவுதல் செய்யார்” என்றும் ,