பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 345 கொழுவிய தசைகள் எல்லாம் கோவினில் தெரிந்து கோத்தங் கழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினல் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் இறைச்சி சால அழகிது நாயன் நீரே அமுதுசெய் தருளும் என்ருர் என்றும், ஊன்.அமுது கல்லையுடன் வைத்துமுன் னேயின் நன்ருல் ஏனமொடு மான்கலைகள் மரைகடமை இவையிற்றில் ஆன உறுப் பிறைச்சிஅமு தடியேனும் சுவைகண்டேன் தேனும்உடன் கலந்ததிது தித்திக்கும் என மொழிந்தார் என்றும் பாடியுள்ள பாட்டில் 'வண்சுவை அழுத ஒழுக் கென வார்த்தைகள் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இயமனது ஊர்தி எருமைக்கடா. அதன் நிறம் கருமை. ஆதலின், மேகத்தை உவமை கூறிக் கொண்டலை நேர் பகடு” என்றனர். இவ்வாறே 'கார்மாமிசைக்காவன்' என்று அருணகிரியாரும் எருமைக் கடாவிற்குக் காரை (மேகத்தினே) உவமை காட்டி புள்ளனர். பெரிய புராணச் செய்யுட்களைப் பயிலும் தோறும் இயம வாதனே அற்று. இறை அன்பில் நிலைத்து இருக்கலாம். இதனைத் திருத்தொண்டர் புராணத்தில் வரும் அடியவர் களின் வரலாறுகளைக் கொண்டு அறியலாம். மெய்ப்பொருள் நாயனர் இறையடி எய்தியதைக் கூறும்போது 'புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார்” என்றும், திரு நாளைப் போவாரின் முக்தி நிலையினைக் கூறும்போது, 'ஒல்லை போய் உள் புகுந்தார். உலகுய்ய நடமாடும், எல்லேயினத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்'என்றும், இவ்வாறு கூறிச் செல்லும் ஆற்றல் படைத்தவர் சேக்கிழார். ஆகவே, 'கூற்றும் குதித்து உய்ந்திட' என்றனர் ஆசிரியர். ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள்