பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சப்பாணிப் பருவம் தெய்வம், விருந்து ஒக்கல் தான் என்ருங்கு ஐம்புலத்தாறு ஒம்பல்தலை" என்னும் குறட்பாவின் கருத்துச் செவ்வனே அமைத்துள்ளதை ஊன்றி நோக்கினுல் உணரலாம். 'கட வுள் போற்றி” என்பதல்ை தெய்வத்தையும், 'விருந்தும்' என்பதனுல் விருந்தையும், 'கிளையும் தாங்கி” என்பதல்ை ஒக்கலேயும், 'குடிகள் ஓங்கி” என்பதனுல் தன்னைச் சுட்டியுள்ள மையையும் காண்க. பரிமேலழர் தான் என்பதை விளக்கும் போது, எல்லா அறங்களும் தான் உளய்ை நின்று செய்ய வேண்டுதலின் தன்னே ஒம்புதலும் அறமாயிற்று' என்று எழுதினர். குடிகள் மக்கள் ஆதலின், அம்மக்கள் தான் என்னும் குறளின் பொருளேத் தழுவி நிற்றலின், அவர்களும் தம்மை ஒம்பிக்கொண்டால் அன்றி ஒங்க முடியுமோ? ஆகவே, குடிகள் ஓங்கி என்றனர். மேலும், சேக்கிழார் வாக்கிலும் 'மிகுதிகொண்டு அறங்கள் பேணி” என்னும் தொடர் அன்ருே பரிமேலழகரையும் 'எல்லா அறங்களையும் தான் உளளுய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னே ஒம்பு தலும் அறஞயிற்று” என்று எழுதத் துணையலாயிற்று? பரிமேலழகர் தென்புலத்தார் என்பதற்கு நேர்மை யான பொருள் கண்டிலர். அவர் கண்டது தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்பது. ஆணுல், குன்றைக் கோமகனுர் தென்புலத்தார் என்பதற்கு குரவர் என்று தமது நுண்மாண் நுழை புலளுல் கண்டனர். குரவர் ஆவர் பெரியோர்கள். அதாவது அறிவால் மிக்கவர். புலம் என்னும் சொல் அறிவு என்னும் பொருளது. தென்புலத்தார் என்னும் தொடர் அழகிய அறிவினயுடைய பெரியோர் என்பதாகும். இவ்வாறு வள்ளுவர் கருத்தும் ஆகும் என்பது சேவை காவலரின் அழுத்தமான கருத்தாகும். இதுவேதான் கருத்து என்பதை இளங்கோ வாக்கால் அறிவிப்பின் எவர்தாம் ஏற்கா தொழிவர்? அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க் கெதிர்தலும் துறந்த என்னை