பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54 சப்பாணிப் பருவம் என்று சட்டம் வகுத்துக் கூறினர். இங்ஙனம் இருக்கப் பரமதத்தன் பலரும் அறிய அம்மையார் காலில் விழுந் தது பொருத்தாற்ற தன்ருே? இதனை அம்மையார் ஏற்பரோ? ஆகவே, அம்மையார் அதனை ஏற்காது ஒதுங்கி நின்ற நிலையினயும், அவனது செயலை ஏற்காது மருண்டு மருண்டு நோக்கிய நிலையினையும் சேக்கிழார் எத்துணை நுண்ணறிவுத் திறனுல் துவன்றுள்ளார் என்பதை, "மாணிளம்பினபோல் நின்ற மனைவியார்’ என்றும், 'கணவர் தாம் வணங்கக் கண்ட காமர் பூங்கொடிய ஒரும்: என்று உவமை கூறித் தெளிவுபடுந்தியதிலிருத்து தெளிய வாம் அன்ருே ' பரமதத்தனை அம்மையார் அதுவரையில் தம் அருமைக் சனவராக எண்ணி இருந்தனர். பின் அவனது செயல்களைக் கண்டு அவனே, வெறுத்தமையினேக் காட்டுவதைக் கூறவந்த சேக்கிழார், அம்:ை யார் வாக்கில் இரு முறை பரமதத்தனை இவன்' என்று ஒரு கைச் சொல்லால் வழங்குமாறு செய்த துண்ணறிவுத் திறனேயும் ஈண்டு உணர்தல் வேண்டும். இதனே, ஈங்கிவன் குறித்தகொள்கை இதுஇனி;இவனுக்காகத் தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி இதுகழித்து என்ற அடிகளில் காணலாம். அடுத்தாற்போல் மற்றும் ஒர் எடுத்துக் காட்டினேயும் காட்டி நிறுத்துவோமாக. அனபாயச் சோழன் தன் அவையில் கூடியிருந்த புலவர் தனிடையே, மலேயில் பெரிது, கடலில் பெரிது, உலகில் பெரிது எது' என்ற விளுக்களே எழுப்பினன். இவ்விளுக்களுக்கு எவரும் விடை இறுத்திலர். அதுபோது அவன் உள்ளத்தில் தொண்டை நன்னுடு சான்ருேருடைத்து என்னும் அடி நினைவுக்குவரத் தொண்டை நாட்டு மன்னனுக்கு எழுதி அவ்விளுக்களுக்குரிய விடைகளே அறிஞர்கள் வழி அறிந்து அனுப்புமாறு விடுத்தனன். தொண்டை நாட்டு மன்னன் சேக்கிழாரிடம் கொடுத்து விடை காணுமாறு வேண்ட, அருண்மொழித் தேவர் உடனே தட்டுத் தடையின்றி,