பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 சப்பாணிப் பருவம் ஊக்கம் உடையான் ஆயிடினும் உற்ற படையும் பலவேனும் ஊக்கம் அறிவன் இடத்தோடு முற்று வினை செய் யாவிடினே என்று கூறுகிறது. காலம் அறிதலும் காவலனுக்குத் தேவையாகும் காலம் அறிதல் என்னும் தொடரை விளக்க வந்த பரிமே வழகர், "வலியான் மிகுதியுடையனுய்ப் பகைமேல் சேற அற்ற அரசன், அச்செயலிற்கேற்ற காலத்தினை அறிதல்” என்றனர். மனக்குடவர் 'அறிதலாவது வினே செய்தற்காம் காலம் அறிதல்' என்றனர். வள்ளுவர், ' ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் 'பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் திராமை ஆர்க்கும் கயிறு ’’ என்றனர். 'ஏற்றகாலம் வரும் அளவும் எண்ணி இருக்க' என்பதும், 'போற்றி எனக்கு வென்றியுறும் பொழுது தேர்ந்தே வினை புரிக' என்பதும் வினயக புராணம். லேம் அல்லன நீக்கிச்செம் பொன்துலைத் தாலம் அன்ன தனிநிலை தாங்கிய ஞாலம் மன்னற்கு நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண் டாகுமோ என்பர் கம்பர். இவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து இங்கு, 'இடம் காலம் முதல் அறிதலும்' என்றனர். முதல் அறிதல் என்ற தல்ை வலி அறிதலும் அரசனது கடமை என்பது பெற்ரும். அதாவது தனக்குள்ள வலியும் பிறர்க்குள்ள வலியும் அறிதல். செய்யத் தக்க வினேயை, எண்ணிலுைம் அதனைச்