பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 8"7ן களுன்-பிரமன், தேந்துழாய வன்-தேன்பொருந்திய துளசி மாலையணிந்த திருமால், நண்ணிய-பொருந்திய, நேர்-ஒப்பு, நவில கூற, பரம-மேலான, நயக்க-விரும்ப, தண்ணியகுளிர்ந்த, ஐய-தலைவரே, பேரழகுடையவரே. விளக்கம் : ஈசன் திருவருள் அடியவர்கள் எண்ணியபடி அருளுவதே ஆகும். திருநாவுக்கரசர் இறைவனிடம் தாம் சமண சமயத்தில் சேர்ந்ததனுல் மாசுண்ணப்பட்டமை யினால், அம்மாசு நீங்க இறைவரிடம் வேண்டினர் என்பதைச் சேக்கிழார், புன்னெறியாம் சமண்சமயத் தொடக்குண்டு போந்தஉடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட் டருள் என்று பன்னுசெழுந் தமிழ்மாலை முன்னின்று பாடுவார் என்று குறிப்பிட்டுள்ளனர். இஃது உண்மை என்பதை அப்பர் வாக்காகிய, பொன்னர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னவி காப்பதனுக் கிச்சை யுண்டேல் இருங்கூற் றகல மின்ஞரும் மூவிலைச் சூலம் என்மேல் பொறிமேவு கொண்டல் துன்ஞர்க டந்தையுள் தூங்கான மாடச் சுடர்க் கொழுந்தே கடவும் திகிரி கடவா தொழியக் கயிலை யுற்ருன் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய் பணியால் வரை போல் இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாய் இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தை யுள் தூங்கானேமாடத் தெம்தத் துவனே என்ற பாடல்களால் தெரியலாம்,