பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 சப்பாணிப் பருவம் 'அறம் பொருள் இன்பமான அறநெறி வாழாமல் புல்லி மறங்கடிந்து அரசர் போற்ற வையகம் காக்க” வேண்டும் என அரசர்க்கும் உபதேசித்துள்ள்ளனர். இவைகள் எல்லாம் சேக்கிழார் பெருமானர் பரமகுருசாமி என்பதையும் அவ தார புருடர் என்பதையும் காட்டுகின்றன அல்லவோ? இது குறித்தே திரு. பிள்ளை அவர்கள், 'நம்பரமகுரு சாமி என்று யாவரும் நயக்க அவதாரம் செய்தாய்' என்று பாடிப் பரவினர். (36) 6. வம்பிட் டொளிச்முலை மாதுமை காண மணிப்பொது நடனம்செய் வார்முனம் மனம்நைத் துருகிட் நிற்றல் மதித்தவர் முதல்தல்க நம்மிட் டருமறை யோர்கை குவித்து நயந்து வியந்துட்னே தறுவிரை நல்கி அலங்கல் புனைந்து நகும்பரி வட்டம்எடுத் - தம்பிட் டொளிர்சடை யவரே இவர்என் றையமறத் தெளியா யாத்திடு முன்னர் நன்னர் விபூதிய தள்ளுபு கொள்ளுகெனக் கும்பிட் டேற்ற திருக்கை குவித்துக் கொட்டுக சப்பாணி கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி | அ - சொ) வம்பிட்டு - மார்புகச்சு இட்டு, மணிப் பொது - அழகிய பொற் சபையில், முனம் - சந்நிதி முன், அவர் - நடராசர், முதல் உலகெலாம் எனும் முதல், நல்க-கொடுக்க, நம்பிட்டு-விரும்பி, அருமறையோர்-அருமை யான வேதங்களை உணர்ந்தவர், நயந்து-விரும்பி, நறுவிரைநல்ல மணமுள்ள சந்தனம், அலங்கல் - மாலை, புனைந்து