பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 சப்பாணிப் பருவம் ஒருங்கு - முழுமையும் அனேயார் - அத்தகையவறியவர், தண்டல்-தடை-பூப்ப-தோன்ற, கைத்தலம் விரியாதுஇல்லை என்னுமல், குவி தரும் - அள்ளிக் கொடுக்கும், வறிதாம்கொல் - விளுகப் போகுமோ, தவம் - போற்றி செய்தல், கண்டல் - தாழை, செறிந்த - நிறைந்துள்ள, கடல் வண்ணன் - கடல் நிறம் படைத்த திருமால், கலி கெழு - ஒசை மிகுந்த, கண்துயில்வது - உறங்குவது, பொர -போல, சுதை-சுண்ணும்பு, தீற்றிய-பூசப்பெற்ற, காமருஅழகிய, கொண்டல் - மேகம். விளக்கம் : உலகில் ஆதுலர்களாகிய ஏழைகள் 'தம் எண்ணத்தில், பட்சணம், உண்ண உணவு இல்லையே, உடுக்க உடையில்லையே என்ற ஏக்கத்துடன், நற்குணம் வாய்ந்த மனையாளை மணந்து வாழ்வதற்கும் இல்லையே” என்று எண் னிக் கொண்டிருப்பர். அங்ஙனம் எண்ணியவர்கள் தம் குறை களே நீக்குவோரிடத்துச் சென்று கூறி, அக்குறைகளே நீக்கிக் கொள்வர். உணவு வேண்டி இருந்தமையினே இரங்கேச வெண்பா, - அங்கிஉம்பர் கோன்கா அருந்த நினைந்தர்ச் சுனன்பால் இங்கிதமாப் பெற்ருன் இரங்கேசா என்று கூறுகிறது. உடை வேண்டி இறைவர் நேசநாயனரிடத்தில் இரந் ததை முதுமொழி மேற்வைப்பு என்னும் நூல், ஈசன் இரந்த்ாலும் ஈந்தாரோ டொத்துயர்ந்தார் நேசர் இடத்திரந்து நிற்றலால் என்று இயம்புகிறது. மணத்தல் பொருட்டு வேண்டுதலைத் திருவாலவாயுடை uumʻri திருவிளையாடற் புராணம், தருமி என்பான் இறைவ னிடத்தில் சென்று,