பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 391 புறநானூறும் 'இன்மைதீர்க்கும் குடி' என்று இங்கணம் ஈவார் குடியையே புகழ்கின்றது. இஃது இவர்களது பிறவிக் குணம். இதனை ஒளவையார், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் என்றனர். இதனுல்தான் 'ஓர் பழக்கம் முன் உள்ளது” என்றனர். கடல் அருகே தாழைகள் மிகுதியும் உண்டு. இதனேப் புலவர்கள் நெய்தல் நிலத்தைக் கூறும் இடங்களில் எல்லாம் கூறியே செல்வர். திருஞான சம்பந்தரும் திருவெண்காட்டுப் பதிகத்தில், விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலே க் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே என்று குறிப்பிட்டுள்ளனர். குன்றத்துரசில் மாளிகைகள் வெண்மை நிறச் சுண்னம் தீட்டப்பட்டமையின், திருப்பாற்கடலுக்கு உவமையாதலைக் காணவும். திருமாலுக்கு நிகராக மேகங்கள் கூறப்பட்டன. பாற்கடல் உவமை மாளிகையின் பரப்பையும், வெண்ணிறத் தையும் உணர்த்தற்கே ஆம், அத்தகைய மாளிகைமேல் மேகம் உறங்குதல் என்பதால் மாளிகையின் உயர்ச்சி கூறிய வாருயிற்று. மேகம் வெண்ணிற மாளிகையில் படிதலின் திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால் உவமையாகக் கூறப்பட்டார். உயர்ச்சி வாய்ந்த இடங்களில் மேகங்கள் தவழ்வதைச் சேக்கிழார் பெருமாளுர், காரேறும் கோபுரங்கள் கதிர்ஏறும் மலர்ச்சோலை தேரேறும் மணிவீதி திசையேறும் வசையில்அணி