பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 409 கைலயங்கிரி திருநொடித்தான் மலை என்னும் பெயர் பெறும். இதனை மூவர் முதலிகளும் பாடியுள்ளனர். இதற் குரிய பதிகங்கள் ஏழு. இறைவன் பரமசிவன் என்றும் இறைவி பார்வதியம்மை என்றும் பெயர் பெறுவர். இறை வர் சங்காரக் கடவுளும் ஆதலின் அவர் வீற்றிருக்கும் மலே நொடித்தான் மலை என்ற பெயரினைப் பெற்றுள்ளது. இது, வடநாட்டில் இமயமலையில் இருப்பது. சேர்தற்கரிதான்தலம். என்ருலும், இதுபோது திகழும் திருத்தருமை ஆதீனம் குரு மகாசந்நிதானம் கைலை தரிசனம் செய்து வந்தவர். இந்த அருமை பெருமை காரணமாக பூரீலயூரீ கைலே சுப்ரமண்ய தேசிகளுானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் என்றே அன்பர் களால் போற்றப்பட்டு வருகின்ருர். கைய யாத்திரை என்ற நூலும் தருமை ஆதீனத்தாரால் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், சில குறிப்புக்களை பூரீராமகிருஷ்ண மடத்தா ரால் வெளியிடப்பட்ட ரீ கயிலாலயம் என்னும் நூலில் காணலாம். இத்தலத்தைக் காண முயலும் முயற்சியின ஆணி, ஆடி, ஆவணி மாதங்களில் மேற்கொள்ளுதல் நலம். குன்றத்துரர் மேலும் பல சிறப்புக்களேப் பெற்றமை யிலுைம், வளம் பல உடையமையிலுைம், சிறப்பும் பெற் றுள்ளமையிஞலும் திரு பிள்ளே அவர்கள், உத்தமமார் பல ஏதுவினுல் இனும் உரைதரு பற்பலவாய்க் குலவிய வளமார் குன்றத்துார்' என்றனர். வேளாளர்கள் பெருந் தொண்டர்கள். . இதுகுறித்தே அப்பர் பெருமாளுர் தம் திருவாக்கில் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றருளிஞர். ஆகவே, இவர்கள் சேவையர் எனப்பட்டனர். மேலும், வேளாளர்கள் தம் தொண்டின் காரணமாக எதிலும் பெரும் வெற்றியே கண்டு வருபவர்கள். இதனைப் பல சான்றுகளைக் கொண்டு நிறுவலாம். சங்க காலத்துச் சான்றுகள் காட்டினலே இக் கருத்தை நிலைநாட்டப் போதுமான தாகும். ஒரு முறை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவுழிக் கோவூர்கிழார் மன்னனே அடைந்து,