பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 413 பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்றனர். ஆகவே, அவர்கள் இதனை நினைவில் கொளல் வேண்டும். வினே, என்றும் உயிர்களைப்பற்றி இருத்தலின், தீரா இரு வல்வினை என்றனர். இதனை, நெல்லிற் குமியும் நீகழ்செம் னிற்களிம்பும் சொல்வில் புதிதன்று தொன்மையே-வல்லி மலகன்மம் அன்றுளவாம் என்ற சிவஞான போத வெண்பாவாலும் 'இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவ தாகும்” என்று சிவஞான சித்தியார் திரு விருத்தத்தாலும் உணரலாம். நல்வினையும் பிறவிக்கு ஏதுவாதலின் திருவள் ளுவரும், 'இருள்சேர் இருவினையும்' என்றனர். இத் தொடர்க்குப் பரிமேலழகர் பொருள் கூறுங்கால், 'மயக்கத் தைப் பற்றி வரும் நல்வினை தீவினே' என்றும் கூறி, மேலும் விளங்குங்கால், 'நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலாம் இரு வினையும்' என்றனர் என்று விளக்கினர். 'இருள்புரி வினைகள்’ என்பது யசோதர காவியம். 'தீவினை இரண்டும் தீர்ந்தோம்” என்பது திருவிளையாடற் புராணம். ஞான சாரியரது அருள்நோக்கால் அன்றி வேறு வகையில் தீராமை பற்றித் 'தீரா இருவினை” என்ருர், பிறவிக்கு இருவினேயும் காரணமாகும். இது குறித்தே மணிமொழியார், 'அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப், புறந்தோல் போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலே’ என்றனர். பிறந்தை என்பது ஒர் அருஞ்சொல்; பிறப்பு என்னும் பொருளது. பிறவி வெம்மை நிறைந்தது என்பது உண்மை யாதலின், இறைவன் திருவடியின அடைதலேத் திருவடி நீழல் அடைதல் என்பர். 'குளிர்தருவே' என்றதும் இக்கருத்துப் பற்றியே ஆகும். பெருந்தாகம் என்பது காமம். இவ்விச்சை இப்பிறவியில் உயிர்களே அலைப்பது ஆதலின், பெருந்தாகம் என்றனர்.