பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 16 முத்தப் பருவம் ஈண்டுத் திரு பிள்ளையவர்கள் சைவ மரபுபடி பொய் யடிமை இல்லாத புலவரையும் தொகை அடியார் இனத்தில் சேர்த்துத் தொகை அடியார் ஒன்பதின்பர் என்றனர். இதற்கு அரணுக நம்பி ஆண்டார் நம்பிகள் பொய்யடிமை இல்லாத புலவர் பற்றித் தாம் பாடிய பாடலாகிய, தரணியில் பொய்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர் பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே பொருள் அமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே என்பதில், கபிலர், நக்கீரர் முதலிய சங்கத்து நாற்பத் தொன்பது புலவர்களேக் குறிப்பிட்டுள்ளனர். ஆனல், திருத் தொண்டத் தொகையினே நன்கு துருவி ஆயும்போது, பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் சங்கச் சான் ருேர்கள் அல்லர். அத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளவர் ஏனைய தனி அடியார்களைப் போல ஒரு தனியடியாரே என்பது புலனுகின்றது. இவ்வாறு கருதுதற்குக் காரணமும் இருக்கின்றது. சுந்தரர் தொகையடியார்களைத் தொகுத்து ஒரே பாடலில் குறித்துள்ளனர். அவர் பொய்யடிமை இல்லாத புலவர் என்பாரைத் தனி அடியார்களைப் பற்றிக் கூறிய பட்டியலில்தான் சேர்த்துக் கூறியுள்ளனர். ஆகவே, பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் தனி அடியாரே ஆவார். நொகையடியார் ஆகார். ஆனல் 'தில்லைவாழ் அந்தணர்களும் தனியடியார் வரிசையில் இணைத்துப் பேசி இரும்பதல்ை, தில்லைவாழ் அந்தணர்களும் தனி அடியார் தாமோ?” என்று சிலர் வினவலாம். அத்தொடர் ஆரூர் பெருமானல் அருளிச் செப்யப்பட்டது. ஆகவே, அது மகுட மாக வைக்கப்பட்டதே அன்றி வேறன்று. சேக்கிழார் பெருமானுர்க்கும் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் சங்கச் சான்ருேர் என்ற எண்ணமே இல்லை என்பதை அவர்