பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முத்தப் பருவம் சுந்தரர் மண்ணுலகு தணந்து கைலயங்கிரி செல்லும் அவாவினராய்க் கைலைக்குச் சென்றதை அவரே, நிலைகெட விண்ணதிர நிலம்.எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானைஏறி வழியேவரு வேன் எதிரே அலைகட லால்அரையன் அலர்கொண்டுமுன் வந்திறைஞ்ச உலேயணே யாதவண்ணம் நொடித்தான்மலை யுத்தமனே என்றருளியுள்ளனர். "மண்ணில் பொலிபு என்று கூறியதனால் சுந்தரர் யூத வுடலுடன் இருந்தபோதே கைலாயத்திற்குச் செல்ல ஒருப் பட்டார் என்பது தெரிகிறது. சுந்தரர் கைலைக்குச் செல்லும் போதும் நொடித்தான் மலை இறைவனது காது குளிரத் தேவாரம் ஒதினமையின், அப்பதிகம் தீந்தமிழ் ஆனமை யின், 'காதகம் உள்ளுருக்கு வளமை உடைத்தாய்' என்றனர். இதனைச் சுந்தரரே, இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயான அருள்புரிந்து மந்திரம் மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தம்ஆ ரூரன் என்ருன் நொடித்தான்மலை உத்தமனே என்றருளினர். இனிக் கயிலாயவரைக்கண் இவர்ந்து அம்மாதேவன் வடிகாத கம்புக்கு உள்ளுருக்கு வளமை உடைத் தாய் என்பதற்குக் காரைக்கால் அம்மையார் இறைவர் காதகம் குளிர, 'அங்கனன் அம்மை யே.என் றருள்செய அப்பா என்று, பங்கயச் செம்பொன் பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார்’ என்று எடுத்துக் காட்டினும் பொருந்தும். அல்லது, சேரமான் பெருமாள் நாயனர் திருக்கைலையில் தாம் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாவை இறைவர் செவி குளிரப் பாடி அருளினமை கருதி இவ்வாறு கூறப் பட்டது என்று விளக்கினும் அமையும். இதனேச் சேக்கிழார்,