பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 429 அதுவும் சேய்த்தன்று நணிைத்து’ என்ருர். இதில், தண்ணிர் பந்தரை அமைத்தவர் அந்தண மரபினர் என்பதையும், அவர் உள்ளூர் வாசியினரே அன்றி, வெளியூரினர் அல்லர் என்பதையும், வீட்டிற்குத்தான் போயுள்ளாரே அன்றி, வேறிடத்திற்குச் சென்ருர் அல்லர் என்பதையும், அங்ங்னம் சென்றவர் இப்போதுதான் சென்றனர். ஆதலின், வீட்டிற் குச் சென்ருல் காணலாம் என்பதையும், அவ்வீடும் சேய் மையில் இல்லை, சென்று காணுதற்குரிய முறையில் அண்மை யிலேயே உள்ளது என்ற யாவற்றையும் சுருங்கிய முறையில் சொற்றதைக் காணவும். சூதபா டலங்கள் எங்கும் சூழ்வழை ஞாழல் எங்கும் சாதிமா லதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும் மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும் போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னுகம் எங்கும் என்ற இடத்து மரங்களின் பெயர்களை விளங்க வைத் தமை காண்க. மறைவளர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப் பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந்து இறையவன் உமையாள் உடன் அருள் தரஎய் தினை (என்பார் என்ற கவி, நவின்ருேர்க்கு இனிமை பயத்தலை உணரவும். அப்பர் பெருமாளுர் அப்பூதி அடிகளார் மைந்தர் அரவு கடித்து இறந்ததை அறியாராய்த் தாம் உணவு கொள்ளுங் காலத்தே திருநீறு நல்க மூத்தமகளுரையும் அழையும் என்ற போது, அப்பூதியடிகளார் அவன் இறந்தான் என்று கூறி, அப்பர் பெருமான் உள்ளத்திற்கு உறுகண் உறுமாறு சொல்ல ஒண்ணுது என்று உளம் கொண்டவராய் நன்மொழி புகலும் முறையில், 'இப்போது இங்கு அவன் உதவான்’ என்று கூறியதாகச் சேக்கிழார் அப்பூதி அடிகளார் வாக்கில் அமைத்துப் பேசியது, நன்மொழி புணர்த்திப் புகன்றதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.