பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முத்தப் பருவம் மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டம் தரித்த பிராற்குநல் லூரின் முன் கோவணநேர் கொண்டிங் கருள் என்று தன் பெருஞ் செல்வமும் தன்னையும்தன் துண்ட மதிநுத லாளேயும் ஈந்த தொழிலினனே என்று குறிப்பிட்டுச் சென்றனர். அதாவது கோவனம் இருந்த தராசுத்தட்டு நிறைகாணச் செல்வத்தையும், துணிமணிகளையும் இட்டதோடு இன்றித் தாமும் தம் மனைவியாரும் ஏறினர் என்பதாம். ஆனல், சேக்கிழார் பெருமானர் தராசுத் தட்டில் ஏறியவர்கள் மனேவியாரும் அமர் நீதியாரும் மட்டும் அல்லர், அவர்க ளுடன் அவர்கள்தம் குழந்தையும் ஏறியிருந்தது என்பதை, மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப் புனேம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் தனையு டன்கொடு தனித்துல வலங்கொண்டு தகவால் இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து என்றதோடு நில்லாது, தொழுது பொற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும் வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்தெழுந் தருளினர் ஐயர் என்றும் பாடித் தம் கருத்தை விலியுறுத்தினர். ஆகவே, சேக்கிழார் பெருமானுர் சிற்சில சமயங்களில் முரண்களும் காட்ட வேண்டி இருந்தது. ஆனால், அம்முரண் பாடான கருத்துக்களும் முற்றிலும் ஒப்புக்கொள்ளக்கூடி யனவே அன்றி வேறல்ல. இதனை அறிந்தே ஈண்டு “வெல்லும் தகைய முரண்காட்டி' என்று பாடப்பட்டது. ஆயினும், ஈண்டுச் சிலர் நம்பியாண்டார் நம்பிகளும் தராசுத் தட்டில் குழந்தையுப் ஏற்றப்பட்டது என்பதைக் கூறியே