பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முத்தப் பருவம் கந்தம் கமழ்மென்குழ லீர்இதுஎன் கலைவாள் மதியம் கனல்வான் என இக் சந்தின் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியிர் தவிரீர் தவரீர் வந்திங் குலவி நிலவும் விரையார் மலையா னிலமும் எரியாய் வருமால் அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள்பெற் றுடையார் அருளார் புலரும் படியன் றிரவென் அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவன் அளவோ பெருவாழ் வுரையீர் பலரும் புரியும் துயர்தான் இதுவோ படைமன் மதனுர் புடைநின் றகலார் அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற் றுடையார் அவரோ அறியார் தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரில் நீரே அல்லால் ஆரென் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான் நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே ஊரும் சடையீர் விடைமேல் வருவீர் உமதன் பிலர்போல் யானே உறுவேன் இப்பாடல்களைப் போலப் பல பாடியிருப்பதால் ஈண்டு, திரு பிள்ளை அவர்கள் 'கல்லும் கரையக் கவிபாடும் கனிவாய்” என்று பாராட்டிப் பாடியதன் சிறப்புப் புலனுகும். சேக்கிழார் பெருமாளுர் அடியார்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி இருப்பதுபோல் எப்புலவர்களும் பாாாட்டி இலர். இவ்வரிய உண்மையினை, ஒழியாப் பெருமைச் சடையனர் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்தழித்தார் ஆண்ட நம்பி தனைப்பயந்தார்