பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fh. Urr சேக்கிழார் பிள்ளைத் தமிழ் அமைப்பு இவர்கள் வழிவந்தவர்கள் ஆகியவர்களைக் காப்புக் கடவு ளாகப் பா டி இருப்பதையும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். சேக்கிழார் பிள்ளைத்தமிழில், முதற்கண் விநாயகக் கடவுள் வணக்கமும் அடுத்தாற்போல் பாயிரம் என்னும் தலைப்பில் குருவணக்கமும், அவை அடக்கமும் அமைந்து இருக்கின்றன. நூலுக்குள் காப்புப் பருவத்தில் பதினுேரு பாடல்களும், ஏனேய ஒன்பது பருவங்களில் தனித்தனிப் பத்துப் பாடல்களுடன் நூற்ருெரு பாடல்கள் பொருந்தி யுள்ளன. ஈற்றுப் பாடல் வாழ்த்துக் கூறி முடிப்பதுபோல் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். திரு பிள்ளை அவர்கள் பூரீ சேக்கிழார் பிள்ளைத் தமிழில் தமது கற்பனை எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அமைத்துப் பாடல்களைப் பாடியுள்ளனர். இதனைக் குன்றத் தூரினைச் சிறப்பிக்கும் இடத்தும், பாலாற்றின் வளம் குறித் துப் பேசுமிடத்தும், தொண்டை நாட்டுச் சிறப்பை அமைத்துப் பாடும் இடத்தும் நன்கு காணலாம். நூலகத்தில் சேக்கிழார் பெருமையினையும் அவர் களின் மாட்சியினையும், அவர் தம் பன்முக ஞானத்தினையும், தெய்வீக நிலையினையும், வேளாளர்களின் மாண்பினையும், நன்கு சித்தரித்து உள்ளனர். இவரது இலக்கண, இலக்கிய, சைவசமய, சித்தாந்த சாத்திர, திருமுறை, புலமையினை இந் நூலில் பரக்கக்காணலாம். இவற்றை எல்லாம் விளக்க உரைக்கண் நன்கு உணரலாம். சேக்கிழார் பிள்ளைத் தமிழின் சிறப்புப் பற்றி இந் நூலாசிரியரின் மாணவர் திருவாவடுதுறை திரு. ஆறுமுக சுவாமிகள் பாடியுள்ள பாடல்களின் மூலமும் அறியலாம். மற்றவர்மான் மியப்பெருமை அருமையுடன் உளத்துணர்ந்து மகிழ்பேர் அன்பால் கற்றபயன் இன்றடைந்தோம் இம்மைமறு மைப்பயனுக் கதிர்க்கும் ஈதென்