பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 461 ஈண்டு, 'நூல்.ஆறு தேர்ந்தவர்' என்றனர். ஆருவன ஆறு அங்கங்கள். அவை சிட்சை, வியாகரணம், சந்தசு, நிறுத்தம், சோதிடம், கற்பம். எனவே ஈண்டு, 'நூலாறு’** அழல்வாய்' என்றனர். யாகாக்கினியில் நெய் முதலிய அவிஸ் பாகங்கள் பெய்யப்படுவதன் நோக்கம், அவை தேவர்கட்கு உணவாகப் போய்ச் சேர்தல் என்னும் மரபு நோக்கியாகும். மேகமே நீர்ச் சால்களுக்கும் ஆறுகளுக்கும் நீரைத் தரும் கருவி ஆதலின், மேகம் எல்லாம் சாலாகவும் ஆருகவும் பாய என்றனர். ஆறுபோல் நீர்ச்சால் பாய என்று கூறினும் அமையும். மேகம் இன்றேல் உலகம் இல்லை. இதனை வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் சிறப்புறச் செப்பிச் சென்றனர். ' வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணரல் பாற்று ' துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய துர உம் மழை சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு " " தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின் ’’ நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்கா தாகி விடின் ’’ என்றும் கூறிப்போந்தார். அமுதுநூறு மாமழை நீரத ளுலே அமுதுாறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதுாறும் காஞ்சிரை ஆங்கது. வாமே ' என்பர் திருமூலர். எனவே, அது நோன்மைசால் மேக மாயிற்று.